தஞ்சாவூர் அரசர் விஜயராகவ நாயக்கர் மகா பக்தர் , வைணவர் , அவரது நாளின் பெரும்பகுதியை பூஜைகளில் செலவு செய்தார் , மீதி வேலையை ஏடுகளை படிப்பதிலும் கழித்தார் . நீதிமான் . தனது வாழ்நாளில் பொய் கூறாததை செயல்படுத்தியவர் , தர்மம் செய்வதில் விருப்பம் உடையவர் , விஷ்ணுவுக்கு கோவில் இல்லாத ஊர்களில் எல்லாம் தஞ்சை மண்ணில் கோவில் அமைத்தார் . அதில் பெரியது " மன்னார்குடி ராஜகோபலசாமி கோவில் ".
தஞ்சையில் இவரது காலத்தில் பஞ்சம் ஏற்பட்டது , மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர் , இவர் பிராமணர்களுக்கு போஜனம் செய்வதிலும் , கடவுளுக்கு பூஜை செய்வதிலும் இருந்தார் , மக்கள் படும் பஞ்சத்தில் கவனம் செய்யவில்லை என்பதால் பெருவாரியான மக்கள் மதுரையை நோக்கி வந்துக்கொண்டு இருந்தனர் , அவர்களுக்கு சொக்கநாத நாயக்கரும் கஞ்சித்தொட்டி அமைத்து பாதுகாத்துவந்தனர் . இந்த காலத்தில் தான் காரைக்கால் பிரெஞ்சுக்கார்களும் , தரங்கம்பாடி டேனிஷ்களும் இப்பகுதிக்கு வியாபாரத்துக்காக வந்தனர் . ஆனால் நாகப்பட்டினம் பிரெஞ்சு மக்களுக்கு உணவளிப்பதாக கூறி பலரை அடிமை வேலைக்காக பல நாடுகளுக்கு அனுப்பிக்கொண்டு இருந்தது .
மதுரை மன்னர் சொக்கநாத நாயக்கர் தஞ்சை மன்னரை பார்த்தது இல்லை எனவே வணிகர் வேடத்தில் சென்று மன்னரை கண்டுவரலாம் என்று வேடத்தில் செல்கிறார் , தன்னை துவாரசமுத்திர லிங்ககட்டி வைசியர் பிரிவினர் என்று அறிமுகபடுதிக்கொண்டு சென்றார் , மன்னரும் பூஜைகள் முடிந்து வெளியில் வந்தார் , வெகுதொலைவில் இருந்து சொக்கநாதர் மன்னரை கண்டார் , மன்னருக்கு பின்னால் அழகே உருவான ஒரு பெண் வருவதைக்கண்டு விசாரித்தார் , அவர் தான் தஞ்சை இளவரசி மோகனாங்கி என்ற மங்கம்மா என்பதை அறிந்தார் . இளவரசியை கண்டதும் சொக்கநாதருக்கு காதல் வந்துவிட்டது . திருச்சிக்கு சென்றும் கூட மங்கம்மாவின் நினைவாகவே இருந்தார்.
தனது நிலையை தளபதி வெங்க கிருஷ்ணா நாயக்கரிடம் தெரிவித்தார் . வேங்கடரோ சொக்கநாதர் இவ்வளவு மகிழ்ச்சியில் இருப்பதை இதுவரை கண்டதில்லை , கண்ணன் பிறந்த குலத்திலே பிறந்துவிட்டு கோபியர்களோடு கொஞ்சி மகிழாமல் ஒருத்தியையே நினைத்துக்கொண்டு இருக்கும் சொக்கநாதரை கண்டு வியந்தார் வேங்கட நாயக்கர் .
தஞ்சைக்கு மங்கள முழக்கங்களோடு , பல வகை சீர்களோடு வேங்கட நாயக்கர் சொக்கநாதருக்கு பெண் கேட்பதற்கு தஞ்சைக்கு செல்கிறார் . மதுரையும் தஞ்சையும் இணைந்தால் பாதுசா படைகள் தென்பகுதிக்கே வரமுடியாது என்ற மகிழ்ச்சியில் தஞ்சைக்கு சென்றார் .
பூஜை அறையிலிருந்து வந்த விஜயராகவ நாயக்கரிடம் தான் வந்த நோக்கத்தை வேங்கட நாயக்கர் தெரிவித்தார் . வெறித்த பார்வையோடு விஜயராகவர் மாலை வரும்படி கூறி விடை கொடுத்து அனுப்பினார் . தனது குலதெய்வமான கவுரியின் முன் அமர்ந்து இளவரசி மங்கம்மா ருத்ரவீனையை மீட்டுக்கொண்டு இருந்தாள். அந்தப்புர கண்ணிகைகள் ஓடி வந்து " மதுரை மகாராணி , மதுரை மகாராணி " என்று உற்சாகத்தில் கூவினர் .
பெண்கேட்டு சொக்கநாதர் வந்ததும் , மாறுவேடத்தில் தன்னை காண வந்ததை அறிந்த மங்கம்மா வெட்கம் கொண்டாள் . விஜயராகவர் தனது மனைவியிடம் முடிவை கேட்டார் . அவள் " ஏற்கனவே தஞ்சையில் இருந்து திருமலை நாயக்கருக்கு மனைவியாக சென்ற ரகுநாதம்மகாரு அங்கு சென்று தற்கொலை செய்துகொண்டாள், எனவே மதுரை நமக்கு ராசியில்லை என்றாள்" . பிறகு தனது மைத்துனர் ரங்கப்ப நாயக்கரிடம் தெலுங்கில் கேட்டார் அவரோ " கம்பளதார்களுக்கும் பலிஜா குலத்துக்கும் திருமண பந்தம் நின்று வருடங்கள் பல ஆகிவிட்டன , அவர் அவர் குலங்களில் திருமணம் செய்யும் இந்த நிலையில் இது தேவையில்லாதது " என்றார் .
பிறகு தனது பூஜை அறைக்குள் தபோநிதி சோமசுந்திர சுவாமிகளிடம் கேட்டார் , அவரோ மதுரைக்கு மங்கம்மா சென்றால் அது அவளின் பாக்கியம் , மேலும் சொக்கநாத நாயக்கர் வீரரோடு மட்டும் அல்லாமல் நல்ல பண்புள்ளவர் என்று கூறினார் . மங்கம்மா சொக்கநாதரை கண்டதே இல்லை ஆனால் காதல் வயப்பட்டாள்.
அன்று மாலை கம்பிளியில் விஜயராகவர் அமர்ந்தார் , முடிவுக்காக அனைவரும் காத்திருந்தனர் . " தஞ்சை , மதுரை ராஜ்யங்கள் 150 வருடங்களாக நல்ல உறவில் இல்லை எனவே பெண் தர விருப்பம் இல்லை என்றார் " . வேங்கட கிருஷ்ணர் இதை எதிர்பார்க்கவில்லை , " மண உறவின் மூலம் நாம் இணைந்துவிடலாம் என்று கேட்டுப்பார்த்தார் " . தஞ்சை தளவாயும் , விஜயராகவர் மைத்துனருமான ரங்கப்ப நாயக்கரின் மகன் ரங்கநாதனுக்கு மங்கம்மாவை திருமணம் செய்துவைத்தால் தஞ்சையின் சொத்து எப்பொழுதும் காக்கப்படும் என்பதுவே மைத்துனரின் நோக்கம் இதனால் இந்த திருமணத்தை நிறுத்த பாடுபட்டு வெற்றி கொண்டார் . ஆனால் தஞ்சை ராஜ்யமே காப்பு தொழுவர் வம்சத்தை சேர்ந்த அச்சுத தேவராயர் தனது மனைவியின் குடும்பத்துக்கு பெண் சீராக தந்த ராஜ்யமே தஞ்சை ராஜ்ஜியம் .
சோர்வோடு வேங்கட நாயக்கர் திருச்சிக்கு சென்று நடந்ததை சொக்கநாத நாயக்கரிடம் தெரிவித்தார் . சொக்கனாதனால் மங்கம்மாவை மறக்க முடியவில்லை அவளையே நினைத்துக்கொண்டு இருந்தான் . மங்கம்மாவின் தோழிகள் மூலம் சொக்கனாதனுக்கு கடிதம் ஒன்று வந்தது , அதில் மங்கம்மா சொக்கனை தான் விரும்புவதாகவும் , மதுரைக்கு வரவே விரும்புவதாகவும் இருந்ததை கண்டு மகிழ்ச்சியில் குதித்தார் சொக்கநாதர் . பதில் கடிதத்தில் " தஞ்சை வென்று ராஜமரியாதையோடு மதுரைக்கு மனைவியாக மங்கம்மாவை கொண்டு வருவேன் என்று எழுதினார் " .
வேங்கட கிருஷ்ணா நாயக்கர் , கன்னிவாடி ரங்கண்ணா நாயக்கர் பெரும்படையோடு வல்லம் கோட்டையை தாக்க வருகின்றன . சென்ன கதிரி நாயக்கரின் குதிரை வீரர்களும் , மணப்பாறை படைகள் பெத்த நல்லம நாயக்கர் தலைமையிலும் , ராமகிரி பாளையக்காரர் சாமைய நாயக்கர் படைகளும் , தொட்டியன்கோட்டை படைகள் ஒவுழு நாயக்கர் தலைமையிலும் மதுரை படைகளில் சேர்ந்துக்கொண்டே இருந்தன .
ரங்கண்ணா நாயக்கருக்கு வயது 88 அவரால் தற்போது குதிரை ஏற முடியாது எப்படியாவது போரில் தான் இறக்க வேண்டும் என்று இந்த போருக்கு முடியாமல் வந்துவிட்டார் . மதுரை வீரர்கள் காட்டாற்று நீர் போல தெற்கு வாசலை நோக்கி வந்தனர் , பெரும்படைகளை சமாளிக்க முடியாமல் சமாதானம் ஆவதாக வல்லம் முரசுகள் அறிவித்தன . இச்சண்டையில் பங்குபெற்ற கள்ளர் குலத்துக்கு வல்லம் வகையறா என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்டனர் .
போருக்குப் பின்வாங்குவது சத்திரியர் தர்மம் இல்லை என்று விஜயராகவ நாயக்கரும் போருக்கே ஆசைப்பட்டார் , தஞ்சாவூரில் இருக்கும் கம்பளதார்களுக்கு சிந்த புலிவாரு என்பது வீட்டின் பெயர் , அவர்கள் தங்களை தொழுவ நாயக்கர் என்று அழைத்துக்கொண்டனர் அவர்கள் தங்களை பலிஜாவாரு என்றே அடையாளபடுத்திக்கொண்டு வாழ்கின்றனர். அவர்களுக்கு தலைவராக அக்கையா ராஜு தலைமையிலான தஞ்சை படையினர் எவ்வளவு பேர் முயன்றும் மதுரையிடம் தோற்றனர் . தஞ்சை அரண்மனைக்கு சென்று இளவரசியை தேடினார் வேங்கட நாயக்கர் .
மகாராணி ( மங்கம்மாவின் அன்னை ) தூரத்தல் தோழிகளோடு இருப்பதை கண்டார் , வேங்கடரை கண்டதும் தனது குறுவாளை எடுத்து தன் நெஞ்சுக்கு நேரே பிடித்தபடி கத்தினாள் " நெருங்காதே " . பதறிய வேங்கடர் " அம்மா , நான் பகைவனில்லை உங்கள் சேவகன் , மதுரை , தஞ்சை போர் வெற்றி தோல்வி இல்லாமல் முடிந்தது , இளவரசியை மகாராணியாக மதுரைக்கு அழைத்து செல்லவே வந்துள்ளோம் என்றார் " .
இளவரசிக்கு மதுரை ராணியாக வரவே விருப்பம் என்பதையும் தெரிவித்தார் . அவளை மட்டும் அழைத்து செல்லும்படி மகராணி தெரிவித்தார் . அதற்குள் மதுரை வீரர்கள் ஜெய ஜெய ஜக்கம்மா என்ற விஜய கோசத்தை கூச்சல் இட்டனர் , இதைக்கேட்ட மகாராணி தஞ்சை தோற்றுவிட்டதை அறிந்து தனது குறுவாளால் எடுத்து தனது நெஞ்சில் பாய அப்படியே இறந்தாள் , பதறி வந்த இளவரசி மங்கம்மாவும் செய்வது அறியாமல் தானும் குறுவாளால் நெஞ்சை அறுத்து மாண்டாள் .
போரில் தோற்கும்போது இசுலாமியர்கள் கையில் சிக்கிவிடாமல் அந்தப் புரத்தை அழிப்பது காப்புக்களின் குல வழக்கம் , அதனையே தஞ்சை பலிஜார்களும் செய்தனர் . விஜயராகவரும் வேங்கடரும் கோபத்தில் பேசிக்கொண்டு இருந்தனர் , போரில் தனது சொந்த இனத்தவருடன் தோற்றுவிட்டோமே என்ற மன வேதனையில் ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா என்று சொல்லியே விஜயராகவர் பித்து பிடித்தார் .
பெண்ணுக்காக சொந்த உறவுக்களுக்குள் இரு ராஜ்யங்கள் சண்டைப்போட்டுக் கொண்டதை வரலாற்றின் வியப்பில் ஒன்றாக இன்றும் நினைவு கொள்ளபடுகிறது.