குமார கம்பணனின் விஜயநகரப் படை துவாரசமுதிரத்தில் இருந்து 1371 மாசி மாதம் 17 ஆம் நாள் தெற்கு நோக்கி கிளம்பியது . ( இது சிலாவாத்திரா என்ற பெயரில் இம்மரிபினர் இன்றும் கொண்டாடுகின்றனர் - சிவராத்திரி நாள் ) . செங்கழுநீர் பற்று ( செங்கல்பட்டு ) வட்டார சம்புவராயர்களை எளிதில் அடக்கி காஞ்சியில் நியமித்த ஆளுநருக்கு உட்படுத்திவிட்டு மதுரையை நோக்கி வந்தார் .
பங்குனி மாதம் மதுரையை சுற்றி படைகள் நிறுத்தப்பட்டன . கம்பிளி நாட்டு வீரர்களுக்கு மதுரையை கண்டதும் வியப்பில் இருந்தன . கம்பிளி நாடு போன்ற வடுக நாடுகளில் இருக்கும் கோட்டைகள் அனைத்தும் கற்களினால் அமைத்து பெரியதாக இருக்கும் , மதுரை கோட்டையோ மண் கோட்டையாக இருந்தன ,இதை எளிதில் கைப்பற்றிவிடலாம் என்று திட்டம் தீட்டினர் . முகமதியர்களின் வசம் இருக்கும் மதுரையை மீது இந்து ராஜியத்தை நிறுத்துவதே வடுக படைகளுக்கு குறிக்கோள் .
மேற்கு புறத்தில் செலகொல லட்சுமையாவின் அணி எட்டாயிரம் குதிரைகளுடனும் , நூறு யானைகள் , பதினைந்தாயிரம் காலாள் வீரர்கள் என நிறுத்தப்பட்டன . தெற்கே நலகாவுல சிவக்கா நாயக்கர் தலைமையில் அணிகள் நிறுத்தப்பட்டன , வடகரைத் தோப்புக்குள் சக்கிலியர்களின் அணிகள் மாதிக விலாளிகள் பெத்த வீருலு வெங்கடாத்திரி தலைமையில் இருந்தன . கிழக்கே தோப்புக்குள் சில்லவார்களின் பெரும்படை காத்திருந்தது , இவர்கள் அசகாய சூரர்கள் என்னும் கரிவருத பெத்தையா நாயக்கர் தலைமையில் பல்லாயிரக்கணக்கில் வீரர்களுடன் காத்திருந்தனர் .
கொல்லவார்கள் தென்புற முற்றுகையில் நின்றனர் , இவர்களுக்கு தலைமையில் தரிகொடி பசவய்யா நாயக்கர் என்பவர் தலமைஏற்றார். அனைவரையும் வழிநடத்துவது தளபதி பொய்யாவுல மங்கன் என்பவராக இருந்தார் இவர் கொல்லவார் மரபினர் , இவருக்கு இணையான பொறுப்பு அதிகராம் சில்லவார்களின் சங்கு கோபண்ணா நாயக்கருக்கு இருந்ததது . கிணறு தொண்டுவதையும் கல் உடைப்பதையும் பாரம்பரியமாக செய்து வரும் உப்பலவாரு ( உப்பிலிய நாயக்கர் ) குலத்தினர் முதலில் வைகை கோட்டையை வேவு பார்த்து இறங்கினர் . மதுரை கோட்டைக்குள் சென்ற முதல் வடுக குலத்தவர் என்ற பெருமை உப்பலவார் குலத்துக்கே உண்டு .
குமார கம்பணனின் மனைவி கங்கா தேவி கம்பள பெண்களுக்கே உரிய வீரத்துடன் காட்சி அளித்தாள். அமனமலையில் இருக்கும் சுப்ரமணிய சாமி கோவிலை வணங்கிவிட்டு போரை தொடுக்கலாம் என்று ஆசைபட்டாள் . அதன்படி அவளும் சில தளபதிகளும் மலைமேல் ஏறினர் . மலைமேல் ஏறியதும் கங்காதேவிக்கு மகிழ்ச்சி அந்நிலையில் உற்சாகமாக துள்ளிக்கொண்டு அங்கு வந்த ஸ்ரீ ஜானகி என்ற இளம் கண்ணிகை வந்தாள். இவள் அனைகுந்தியின் பாலமுவாரு தளபதிகள் வழி வந்தவள் . கங்காதேவியின் தூரத்து உறவுக்காரி . அனைகுந்தி கங்கையம்மன் தான் இவளுக்கு குல தெய்வம் , பருவமடைந்து ஒரு வருடமே ஆகி உள்ள நிலையில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்துக்கொண்டு வருகின்றன . ஆணைகுந்தி பாலமுவாரு குலத்தவர்களின் வழிவந்த கனக ஜானகியை கங்காதேவிக்கு மிகவும் பிடிக்கும் . இருவரும் வடுகில் பேசிக்கொண்டு இருந்தனர் .
கங்காவின் குதிரையான ருத்ருவின் மேல் ஏறி காத்திருக்க கம்பணன் வந்தார் . கம்பள பெண்படை பிரிவின் தலைவியாக சிந்தல ஜக்கம்மா திகழ்ந்தாள் . மதுரையில் அழகை குன்றின் மேல் ஏறி ரசித்துக்கொண்டிருந்த கங்காதேவியின் அருகில் ஒரு கிழவி வந்தாள் . கங்காவுக்கு தமிழ் தெரியாது . அக்கிழவி மதுரை கள்ளர் இன பெண் . அப்பெண்ணை பார்த்து " மீ பேரு ?" என்றாள், கிழவிக்கு எதுவும் புரியவில்லை இருந்தாலும் பேரு என்பதில் இருந்து சடச்சி என்ற தன்னுடைய பெயரை கூறினாள். மேலே எப்படி தமிழ் பேசுவது என்று கங்காதேவிக்கு தெரியவில்லை .
அமனமலைக்கு அருகில் தொட்ட நாயக்கரின் மனைவி பூமாடி மாரம்மா இரண்டு மாதங்களில் கள்ளர் இனத்தவருடன் பழகி சில தமிழ் சொற்களை தெரிந்து வைத்திருந்தாள். அவள் கங்கா மற்றும் சடச்சி பேசுவதற்கு உதவினாள். சடச்சியை கண்டதும் கங்காதேவிக்கு பிடித்துவிட்டது தனது வளையல்களை கழட்டி பரிசாக கொடுத்தாள்.
துங்கபத்திரா நதிக்கரையில் இருந்த கம்பள வடுக படைகள் வைகையை துங்கபத்திரா என்றே பாவித்து குளித்து மகிழ்ந்தனர் . இந்த நேரத்தில் துலுக்க படைகள் வடுக படைகளை தாக்க ஆரம்பித்தன . கம்பள பெண் தளபதியான ஜோக்கம்மாவை போரை தொடுக்க வேண்டும் , ராஜாவிடம் சொல்லிவிட்டுவரும்படி கங்கா கூறினாள் . கம்பணன் கோபத்தோடு கங்காவை நோக்கி , " இது விளையாட்டு இல்லை , போர் . சித்திரை முழு அமாவாசை இந்த இருட்டில் போர் தேவையா ? " என்றார் .
கங்கா கம்பள பெண்ணின் வீரத்தோடு ," கம்பணா விலகி நில் ! இது என் யுத்தம் , கம்பிளியின் யுத்தம் , இதற்காக தான் காத்திருந்தேன் , ஆயிரம் ஆயிரம் கம்பளதார்களை இழந்தாலும் அந்த ரத்தத்தில் நடந்து சென்று இன்று இரவே பலி எடுப்பேன் , அனைகுந்தியின் பகை முடிப்பேன் , மதுரையை மீட்ப்பேன் இது ரேணுகா தேவி மீது ஆணை என்று கோபத்தோடு கூறினாள் . குமார கம்பணன் கங்காவின் சீற்றத்தை கண்டு வியந்தார் .
கம்பளதார்களுக்கு கங்கை அம்மனும் , எல்லம்மா , ரேணுகாதேவி தான் குல தெய்வம் ஆனால் காவிரி ஆற்றை கடக்க உதவி கம்பள மக்களை காட்டு வெள்ளத்தில் இருந்து காத்ததால் ஜக்கம்மா , பொம்மம்மா போன்ற தெய்வங்களையே தற்போது குல தெய்வமாக கொண்டுள்ளனர் .
கங்கயம்மனின் பூஜை நடைபெற்றது , குலபெரியவர்கள் , தளபதிகள் , தலைவர்கள் அனைவரும் வரிசைப்படி நின்றனர் . கங்கா , கம்பணன் பூஜைக்கு வந்தனர் . பூஜை ஆரம்பம் ஆனது , தேவதுதும்பிகள் வரிசையாக வந்தன , அந்த உருமிகள் இடியை போல உருமின . மண்ணில் விரிக்கப்பட்ட கம்பளத்தில் அனைத்து கம்பளத்து பெரியவர்களும் அமர்ந்து இருந்தனர் .
முதலில் கொல்லவார்களின் காமதேனு பொலிஆவு முதலில் வந்தது . குல ஜென்டலவாறு கொல்லவார்களின் பெருமையை பாடல்களாக பாடினார் . அடுத்து குல வழக்கப்படி சக்கிலியர்களின் ஆவு தான் வரவேண்டும் ஆனால் வரும் வழியில் கடவுளான ஆவினையே பசியில் கொன்று தின்றுவிட்டதால் அவர்கள் சடங்குகளை பார்க்க முடியுமே தவிர பங்குகொள்ள அனுமதி இல்லை . சக்கிலியர்களின் பெருமைகளை பாடல்களாக உரிமிக்காரன் பாடினார் . அவர்களுக்கான பசுவன்னா ஆவு வந்தது .
பிறகு சில்லவார்களின் புல்லைஆவு வந்து நின்றது . பிறகு குஜ்ஜ பொம்மு , பாலமன்னா , காவன்னகாரு, இர்ரிகாரு , கம்பராஜு போன்ற வேகிளியார் குல ஆவுகள் வந்து கம்பளத்தில் நின்றன . வேகிளியார்களின் பெருமைகளை பாடல்களாக பெரியவர்கள் பாடினர் .
கங்கை அம்மன் வழிபாடு முடிந்தது , அடுத்து எல்லம்மா பூஜை . எல்லம்மா தான் கம்பளத்து வகையராவுக்கு குல தெய்வம் மற்றும் ஆதி தெய்வம் . எல்லம்மாவின் உருவத்தை இரண்டு யானை உயரத்தில் மண்ணால் அமைத்து வைப்பது வழக்கம் . போர் தொடங்கும்முன் இந்த சடங்குகளை செய்வது கம்பள காப்புக்களுக்கு வழக்கம் .
போர் தொடங்கிவிட்டது . எல்லம்மாவின் மாலையை எடுபவர்களே போரில் தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்பவர்கள் . எல்லம்மாவை நோக்கி கம்பள குலத்தவர்களின் கன்னி கழியாத ஆண்கள் ஓடுவர் . போட்டி வல்லக்கவாருக்கும் , வேகியார் குலங்களுக்கும் தான் இருக்கும் . இது இவர்களுக்கு கவுருவ பிரச்சனை , யார் முந்துவது என்பது தான் இவர்களுக்குள் போட்டி .
ஜனகவாரு பலிஜா குலம் குலவையிட எல்லாமாவை வணங்கிவிட்டு ஓடத்தொடங்கினர் . கனகனுகா என்ற பாலமுகாரு பெண்ணே மாலையை கைப்பற்றினார் . " பாலமன்னா பிட்டலன்னா பாரி போய் எத்திரி அண்ணா " என்ற கம்பள பாடல்கள் இன்றும் பாடுவதை அறியலாம் .
மதில் ஏறுவதில் வல்லவர்களான ஏறகொல்லவாருகள் கிழக்கில் கோட்டை மீது ஏறி அகழியில் பாய்ந்தனர் , பல்லாயிரக்கணக்கில் உயிர்சேதம் ஏற்பட்டது இருந்தாலும் ஏறகொல்லா தலைவன் ஏறியவாறு இருந்தார் .
முழுவேகத்தில் சில்லவார்கள் மதில் முனைகளில் சண்டை போட்டுக்கொண்டு இருந்தனர் . நெருப்பை ஆயுதமாக கொண்டு துலுக்க படைகளின் மீது பாய்ச்சி அடித்தனர் , சில்லவார்களின் தாக்குதலை தாங்காமால் துலுக்கர்கள் பலர் இறந்தனர் .
சக்கிலியர்கள் முகமதியர்களை அம்புகளால் அறைந்து குருவிகளை போல அடித்து நொறுக்கினர் . கொல்லவார்கள் கண்ணில் கண்ட துலுக்கர்களை எல்லாம் கொன்று குவித்தனர் . கங்காதேவியின் கம்பள பெண்களின் அணி வராக கொடியுடன் ஜக்கம்மாவின் குதிரை பாய்ந்தது , தெலுங்கு குரல் வெறியுடன் காணப்பட்டன , முகமதியர்கள் தப்பி ஓடாத அளவில் கம்பள பெண்கள் அணியினர் தாக்கினர் . கம்பள தலைவன் மங்கன் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார் .
உள்ளே இருந்த துலுக்க பெண்கள் கூக்குரல் இட்டு கூப்பிய கையோடு தரையில் விழுந்தனர் . எங்கே சுல்தான் என்று கேட்டான் தளபதி , தெரியாது என்றான் அங்குள்ள துலுக்க பிரதிநிதி ஒருவன் ,அவன் தலையை வெட்டினார் , சரணம் அடைந்த பெண்களை விடுதலை செய்தார் . சுல்தான் தப்பி ஓடினான் .
கங்காவின் அணி கோட்டையை விட்டு வெளியேறியபோது காவாவுல காமாட்சி , கோவுதாணு கிருஷ்ணம்மா , காலமு ரேணுகா , ஆரம்மா , காடம்மா , போடாவுலம்மா போன்ற பெண் தளபதிகள் போரில் இறந்தனர் .
இரண்டு நாள் கழித்து போர் வெற்றியை கொண்டாடினர் . வைகை ஆற்றில் கம்பள பெண்கள் குளித்து மஞ்சள் பூசி கொச்சை பேச்சுகளுடன் சந்தோசமாக குளித்துக்கொண்டு இருந்தனர் , அப்போது தூரத்தில் 50 குடும்பங்கள் மேற்கு நாடு நோக்கி சென்று கொண்டு இருந்தனர் , அவற்றை கண்ட கங்கா அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று கேட்டாள்.
சற்று தமிழ் தெரிந்த மாரம்மா விசாரித்து அவர்கள் துலுக்க சுல்தான்களின் பிடியில் பாலியல் கொடுமைகளுக்கு இத்துணை காலம் ஆளாகினர் தற்போது துலுக்கர்களின் ஆட்சி இல்லாமல் போய்விட்டதால் தங்கள் ஊர்களுக்கு செல்கின்றனர் என்றாள் . அதில் ஒரு சிறுமியை அனைத்து கங்காதேவி அவளின் பெயரை கேட்டாள் , வீரலட்சுமி என்று சொன்னதும் அவளுக்கு உதித்தது " மதுரா விஜயம் " .
மதுரா விஜயம் என்ற நூலில் குமார கம்பணனின் போர் வெற்றிகளை சமஸ்கிரத மொழியில் எழுத தொடங்கினாள் கங்கா தேவி . கம்பணன் என்ன செய்கிறாய் என்று கேட்க ? மதுரா விஜயம் எழுதுகிறேன் என்றாள் .
சிரித்துக்கொண்டே கம்பணன் , மதுரைக்கு அரசியாக நினைகின்றாயா என்று கேட்டார் , ஏன் கூடாது ? காகதிய பேரரசில் முழு அதிகாரத்தை நமது காப்பு பெண்ணான ருத்ரம்மா ஆட்சி செய்தபோது , நான் ஆட்சி செய்யக்கூடாதா ? என்று பதில் கேட்டாள் .
பெயரளவில் பாண்டிய மன்னன் ஒருவரை நிறுத்தி மதுரையை ஆட்சி செய்யசொன்னார் கம்பண்ணன் .

No comments:
Post a Comment