தென் இந்தியாவிலேயே பெரும்பான்மை சமுகம் நாயக்கர் சமுகம் , காப்பு குல நாயக்கர் , நாயுடு , ரெட்டியார் , கவுண்டர் , கவுடர் , செட்டி இனத்தவர்களே ஒற்றுமையாக நாம் இருந்தால் உலகையே ஆளலாம் . ஆள பிறந்த சமுகமே , கண்ணன் வழி வந்த இனத்தவர்களே , ராமாயண மகாபாரத புராண பெருமை கொண்டவர்களே , தெலுங்கு கன்னடம் தமிழ் பேசும் வீர குலமே ,, அணிதிரளும் நாள் வந்துவிட்டது . கூட்டம் இல்லாத சமுகமெல்லாம் கும்மரிச்சம் போட்டுக்கொண்டு இருக்கின்றது , பெரும்பான்மையாக இருந்தும் பொறுமை எதற்கு ? நாயக்கர் நாயுடு குலமே களம் காண வாருங்கள் மீண்டும் ஒரு விஜயநகர பேராசை நிறுவுவோம் .

Friday, 20 July 2012

அரச மரபுகள்


குமார கம்பணனின் தம்பி இரண்டாம் ஹரிஹரன் 1377 இல் விஜயநகர அரசனான கொண்டைவீட்டு இளவரசனுக்கு தன் மகளை மணம் முடித்து தந்தார் (  கொண்டிவீடு காப்பு குல ரெட்டி வகுப்பை சேர்ந்தவர்களுடையது ) . ஹரிஹரன் 27 ஆண்டுகால ஆட்சியில் கோவா , விஜயநகர மண்டலம் ஆனது . 






இளவரசன் விருபாட்சன் இலங்கை மீது போர் தொடுத்து வெற்றி கொண்டார் , அவரது பேரன் தேவராயன் இரண்டு  1426 இல் பட்டத்துக்கு வந்தபோது விஜயநகர கொண்டைவீட்டு ரெட்டி ராஜியத்தை வென்று தெற்கு ஆந்திரம் முழுவதையும் விஜயநகரின் இணைத்தார் . கொல்லத்தை அடக்கி மலையாள நாட்டை தனது வசம் கொண்டு வந்தார் . 


தேவராயன் காலத்தில் மதுரை ஆளுநராக இருந்த லக்கன்னா ஒரு சேனாதிபதி , மதுரையில் தாங்கள் தான் பாண்டிய வாரிசுகள் என்று பலர் கூறி சண்டையிட்டு கொண்டு இருந்தனர் , மலையாள நாட்டிலும் , காளையார் கோவில் நாட்டிலும் , வேறு மனைவிகளுக்குப் பிறந்தவர்கள் என்று கயத்தாறு , தென்காசி பாண்டியர்கள் வாரிசு போட்டி வந்துவிட்டது . வடுக நாட்டில் இருந்து வந்ததால் சேனாதிபதிகளுக்கு யார் வாரிசு என்பதில் குழப்பமாக இருந்தன . 


லக்கண்ணன் , காளையார் கோவிலில் இருந்த வானாதிராயரை அழைத்து மதுரை அரசனாக ஆக்கினார் . மதுரையில் இருந்து கப்பம் சரியாக வாங்கி தருவதால் " தட்சனா சமுத்திர ஈஸ்வரன் " என்ற பட்டதை லக்கன்னாவுக்கு ராயர் வழங்கினார் . மேலும் கப்பம் பாக்கி தராததால் கண்டிக்கு பெரும்படையுடன் லக்கண்ணன் சென்று வென்று வந்தார் . இம்முறை வழக்கம் போல படைகள் விஜயநகருக்கு திரும்பவில்லை , விரும்பியவர்கள் இங்கயே தங்கலாம் என்று லக்கண்ணன் சொல்லிவிட்டார் . 


திண்டுக்கல் , தாராபுரம் , பழனி தலைவர்கள் விரும்பிய இடங்களில் நிலை கொண்டு விட்டனர் , பாதி அணிகளே விஜயநகருக்கு திரும்பின . கொல்லவார்களின் மாட்டு மந்தைகள் நாய்கள் சூழ பெருவாரியாக உடன் வந்தன .  இரண்டே மந்தைகள் தான் வைகையை கடந்து சென்றன . 


சந்திரகிரியில் இருந்து வந்த சில்லவார் குல குமாரமுத்து எட்டப்ப நாயக்கரின் மந்தைகள் மதுரைக்கு மேற்கே கருக்கொட்டாம்பட்டியில் 1300 வீரர்களுடன் கல்கொட்டை அமைத்து தங்கினர் . மற்றுமொரு சில்லவாறு தளபதியான சக்க நாயக்கரின் அணி கூத்தி( கூட்டி ) கோட்டையில் இருந்து தங்கள் உறவினர்களுடன் சின்னமனூருக்கு கிழக்கே கோட்டை அமைத்து காடுகளை வெட்டி ஊர் செய்து தங்கினர் . 


பிறகு ஆண்ட விஜயநகரின் இரண்டு ராயர்களும் மிகவும் பலவீனமானவர்களாக இருந்தனர் , கலிங்கம் தென் ஆந்திராவை ஆக்கிரமித்து இருந்தது , சந்திரகிரியின் ஆளுநராக இருந்த சாளுவ நரசிம்மன் வலிமையான தளபதி கலிங்கர்களை விரட்டி அடித்தார் . 


1486 இல் சாளுவ வம்சத்தின் முதல் அரசனாக நரசிம்மன் விஜயநகர அரியணை ஏறினார் , கோவா வரை விஜயநகரம் இழந்த பகுதிகளை மீட்டார் . நரச நாயக்கர் என்ற பெயரில் அழைக்கபட்டார் . 


நரச நாயக்கர் தனது தளபதி கொட்டியம் நாகம நாயக்கருடன் சென்று கர்நாடகம் வரை இழந்த பகுதிகளை மீது விஜயநகரில் சேர்த்தார் . நரச நாயக்கர் மதுரையில் இருந்த பொம்மை அரசனை நீக்கிவிட்டு அரண்மனையில் திம்மப்பா நாயக்கரை நியமித்தார் . அனைத்து ஆளுநர்களும் காப்புக்களாக இருந்ததால் சாளுவ அரசரை ஏற்றுக்கொண்டனர் . 


ராமேஸ்வரம் சென்று வழிபட்டுவிட்டு விஜயநகரம் திரும்பினார் நரச நாயக்கர் . ஐந்து ஆண்டுகளில் இரு தனது ஆண் வாரிசினை விஜயநகர் பொறுப்பில் நிறுத்திவிட்டு காலமானார் , 1503 இல் நரச நாயக்கர் இறந்ததும் அவரது மூத்த மகன் வீர நரசிம்மன் முந்தய இளவரசனை பெனுகொண்டா வில் வெற்றி கொண்டு தானே முடிசூடி கொண்டார் ,


துளுவ வம்சம் தோன்றியது 6 ஆண்டுகளில் மைசூர் துளுவ நாயக்கர்களை ஆட்சியில்  ஏற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைசூரில் கிளர்ச்சி எரிய தனது தம்பி கிருஷ்ண தேவரயாரிடம் தலைநகரை ஒப்படைத்துவிட்டு நோய் வாய்ப்பட்டு இறந்தார் . 

No comments:

Post a Comment