பெரும் பொருட்செலவில் மதுரையின் கிழக்கு கோபுரத்தை நாயக்க மன்னர்கள் கட்டி முடித்தனர் . விஜயதசமிக்கு முதல்நாளில் கம்பளத்தார்கள் கோபூஜை ஆரம்பித்தனர் . எல்லா குலத்தவர்களின் பொலிஆவுகலும் கம்பிளியில் வரிசையாக நிற்க தொடங்கின . உறுமியும் பாட்டுமாக வழிபாட்டை தொடர்ந்தார்கள் . கொம்புகளை குலுக்கிக்கொண்டு பொலிஆவுகள் பொறுமையாய் நின்றிருந்தன . சாமி மாடுகள் விலகியதும் கம்பளத்தை சுருட்டிவிட்டு கால் சலங்கயோடு தேவராட்டகாரர்கள் களத்தில் இறங்கினர் , மன்னர் திருமலை நாயக்கரும் முதல் வரிசையில் நின்று ஆடினார் . பாளயக்காரர்களுக்குள் தேவராட்டதில் கடும்போட்டி இருந்தன .
முத்துவீரப்ப நாயக்கரின் மறைவிற்கு பிறகு திருமலை நாயக்கர் அரசராகி 32 ஆண்டுகள் கடந்து இருக்கும் நிலையில் நாடெங்கும் கோவில்களும் , கோபுரங்களும் ஏராளமாக எழுந்தன , ஆடம்பர பிரியராக திருமலை நாயக்கர் இருந்தார் தனக்கும் நாயக்க மக்களுக்கும் விலை உயர்ந்த ஆடைகள் அணிவதற்காக குஜராத் பகுதியில் இருந்து அழைத்துவரப்பட்ட சௌராஷ்டிரா இன மக்களை மதுரையில் குடியமர்த்தினார் . இத்தாலி பொறியாளார் ஒருவரின் திட்டப்படி பெரும் அரண்மனை ஒன்றை கோட்டையின் தென்கிழக்கு மதிலை ஒட்டிக்கட்டினார் . தலைநகரை திருச்சியில் இருந்து மதுரைக்கு மாற்றினார் , மதுரையை சுதந்திர நாடாக அறிவித்துவிட்டார் . மஞ்சள் நிற நந்திக்கொடி நாடெங்கும் பறக்கவிடப்பட்டது .
மதுரை கொள்ளாத அளவு ஜனத்திரள் வசந்த மண்டபத்தை காண வந்திருந்தது . திருமலை நாயக்கர் அரசரான இரண்டு ஆண்டுகளில் மைசூரின் புதிய மன்னர் சாமராஜா உடையார் 5 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் அடைந்த தோல்விக்கு பழிவாங்க முயன்றார் . 1625 இல் தளபதி நந்திராஜன் தலைமையில் மதுரையை தாக்க படை அனுப்பினார் . கன்னிவாடி ரங்கண்ணா நாயக்கரும் , ராமப்பய்யாவும் மைசூர் வரை நந்திராஜனை விரட்டி வென்றனர் . பிறகு திருவனந்தபுரம் , ராமநாதபுரம் போரிலும் ரங்கண்ணா நாயக்கரின் சேவையை பாராட்டி திருமலை நாயக்கர் வசந்தமண்டபத்தில் வைத்து பாண்டியரின் சந்திரஹாச வாளை ரங்கண்ணாவுக்கு பரிசாக வழங்கினார் .
மதுரையின் மாவீரன் ரங்கண்ணா நாயக்கர் என்றும் புகழப்பட்டார். மதுரையில் திருடும் கள்ளர்களுக்கு சவுக்கு அடி தண்டனையையும் , திருந்திய கள்ளர்களுக்கு பாதைக்காவல் உரிமையையும் தருவதற்கு ரங்கண்ணா நாயக்கரே நியமிக்க பட்டார் .
1669 இல் மூன்றாவது முறையாக மதுரை நாட்டுக்குள் மைசூர் பெரும்படையோடு புகுந்தது . மைசூர் அரசன் கந்திரவ நரசனுக்கு பழைய பகமை மட்டுமல்ல புதிய கோபமும் இருந்தது . விஜயநகர அரசன் ஸ்ரீரங்கன் ராயவேலுரையும் இழந்து முதலில் தஞ்சாவுரிலும் பின்னர் மைசூரிலும் தஞ்சம் அடைந்திருந்தனர் . ராயவேலுரில் மீண்டும் ஸ்ரீரங்கனை அரசனாக்க முயற்சியில் மைசூர் ஈடுபட்டது , பிஜப்பூர் படைகள் அதை முறியடித்துவிட்டன அதற்கு உடந்தையாக திருமலை நாயக்கர் இருந்தார் என்பதுவே புதுகோவமாக இருந்தன .
1620 , 1625 இல் மதுரை இடம் தோற்றத்தைப் போல தோல்வியடைய கூடாது என்று மைசூரின் முரடன் என்று பெயர்பெற்ற ஹம்பையாவின் தலைமையில் தோர்க்க வாய்ப்பே இல்லாத பெரும்படையை மதுரைக்கு மைசூர் அரசர் அனுப்பினார் . திருமலை நாயக்கர் வயது அதிகமானதால் மரணபடுக்கையில் இருந்தார் . இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பிரதானி சோமசுந்திர அய்யர் என்பவனுக்கும் கையூட்டாக பெரும்தொகையை கொடுத்து படைகள் ஒளிந்து இருந்தன .
மதுரை படைகளை விட பாளையங்களின் படைகளில் தான் வீரர்கள் அதிகமாக இருந்தனர் . இதை அறிந்த ஹம்பையா நாயக்கர் மதுரையை தாக்காமல் பாளையங்களை முதலில் தாக்க திட்டம் தீட்டினார் . ஆனால் பாளையங்கள் பதில் தாக்குதல் கொடூரமாக இருந்ததால் கோபம் அடைந்த ஹம்பையா கண்ணில் காணும் மக்களின் மூக்குகளை எல்லாம் அறுக்கும் படியும் , ஊர்களை நாசம் செய்யும்படியும் உத்தரவிட்டார் .
திண்டுக்கல் கோட்டையை கன்னிவாடி பாளையக்காரரான ரங்கண்ணா நாயக்கர் நிர்வாகித்து வந்தார் . இக்கோட்டையை மைசூர் படைகள் தாக்க முயன்றன. தந்து 82 வயதிலும் ரங்கண்ணா மதில்மேல் ஏறி படைவீரர்களை ஊக்குவிதுக்கொண்டு இருந்தார் . சோமசுந்திர அய்யரின் சூழ்ச்சியால் மைசூர் படைகள் வந்த செய்தியை அறிந்து ரங்கண்ணா நாயக்கர் சோமசுந்திரத்தை சிறையில் அடைத்தார்.
திருமலை நாயக்கர் , ரகுநாத சேதுபதியை ராமநாதபுரம் பாளையக்காரராக நியமித்த காலம் இது தான் . இதற்கு பிறகு தான் ராமதாபுர நாட்டில் களவு ஒழிந்து அமைதி நிலை பெற்றது . மதுரை படைகளில் 30 ,000 தெலுங்கு கம்பள வீரர்களும் , 5 ,000 கன்னட கம்பள வீரர்களும் , 5 ,000 சக்கிலியர் மாதாரி வீரர்களும் , 10 ,000 மறவர்களும் , 7 ,000 கள்ளர்களும் , 5 ,000 வலயர்களும் , 5 ,000 கவரை இனத்தவர்களும் இருந்தனர் . மேலும் 35 ,000 குதிரைகள் இருந்தன .
திருமலை நாயக்கரின் தம்பி குமாரமுத்து நாயக்கர் மதுரையிலிருந்து படை நடத்திக்கொண்டு திண்டுக்கல் போனார் .வடுக பாளையங்கள் அணிசேர்ந்து மைசூர் படைகளை சுற்றி வளைத்தன.
மதுரை படைகளின் தளபதியாக கன்னிவாடி இளவரசர் சென்ன கதிரி நாயக்கர் பொறுப்பேற்றுக்கொண்டார் . மதுரை அரசின் 150 ஆண்டுகால ஆட்சியில் நடந்த உக்கிரமான போர் இது தான் . ராமநாதபுரத்திலிருந்து மறவர்களின் படைகள் பெருந்திரளாக வந்து மைசூர் படைகளை ஒரு வழி செய்தது .
கோட்டைக்குள் இருந்த ரங்கண்ணா நாயக்கர் படைவீரர்களுக்கு ஊக்கம் அளித்துக்கொண்டே இருந்தார் . யானைப் படைத்தளபதியாக வெள்ளைத் திம்ம நாயக்கர் இருந்தார் யானைகள் அத்துணையும் இழந்தாலும் பராவயில்லை என்று எண்ணி மீண்டும் மீண்டும் மூர்க்கமாக மோத செய்தவாரே இருந்தார் . மதுரை படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஹம்பையா போரை நிறுத்த வெள்ளைக்கொடி காட்டினார் . சென்ன கதிரி நாயக்கரும் போரை நிறுத்தினார் . இரு தரப்பிலும் பெரும் சேதம் ஏற்பட்டது .
15000 பேருக்கு மேல் மைசூர் படைகளும் , 10000 பேருக்கு மேல் மதுரை படைகளும் வீரர்களை இழந்தனர் . போரில் 58 பாளையங்கள் பங்குகொண்டன , கம்பள பாளயங்களுக்கு உதவியாக தற்போது மறவ பாளையங்களும் சேர்ந்து இருந்தன . ரங்கண்ணா நாயக்கரும் மைசூரின் அரசன் ஸ்ரீரங்கனும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் மைசூருக்கும் , மதுரைக்கும் எப்பொழுதும் சண்டைகள் தான் .
"வருகிற அமாவாசைக்குள் உன்னுடைய மூக்கை உனது நாட்டில் வைத்தே அறுப்பேன் , கம்பளத்தார் இனத்தில் புல்லுருவியாக இருக்கும் உனது அரசனிடம் சென்று சொல் , அவனது மூக்கையும் அறுப்பேன் என்று ,," என்று ரங்கண்ணா நாயக்கர் கோபத்தோடு கூறினார்
ஹம்பையாவின் படைகள் சத்தியமங்கலம் சென்று சேர்ந்தன . படைசெலவுக்கு வராகன் இல்லாமல் மதுரை படைகள் தவித்தன , தனது பாளையமான கன்னிவாடியில் இருந்து 16000 வராகன்களை வாங்கிக்கொண்டு வரும்படி ரங்கண்ணா நாயக்கர் தெரிவித்தார் , மேலும் மதுரையின் தளபதியாக ராமப்பையன் என்ற பார்பன இனத்தவரை திருமலை நாயக்கர் நியமித்தது எந்த பாளயக்கார்களுக்கும் பிடிக்கவில்லை , பூணுல் போட்டுக்கொண்டு பூஜை செய்யும் பார்பனர்களை போருக்கு தலைமை தாங்கவைப்பது யாருக்கும் பிடிக்கவில்லை , சத்திரியராக இருந்துவிட்டு பார்பனர்களுக்கு சலுகைகள் வழங்குவதை எந்த நாயக்கர் பாளையங்களும் விரும்பவில்லை மேலும் மதுரையிடம் செலவுக்கு காசு வாங்குவதையும் நிறுத்திக்கொண்டனர் .
ரங்கண்ணா நாயக்கர் தனது மகன் சென்ன கதிரி நாயக்கரிடம் மைசூர் படைகள் அவர்களின் ஊர்களை நெருங்கும்முன்னே காவிரியை தாண்டும்முன்னே உயிரை எடுக்காமல் அவர்களின் மூக்கை மட்டும் அறுத்துவிட உத்தரவிட்டார் இதுவே திருமலை நாயக்கர் காலத்து மூக்கறுப்பு போர் என்று வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தது .
தஞ்சை பலிஜா கவரைகள் கைகளிலும் , மதுரை பலிஜா கம்பளத்தார் கைகளிலும் , செஞ்சி பலிஜா செட்டி கைகளிலும் இருந்த நிலையில் திருமலை நாயக்கர் சுற்று அரசுகளிடம் மோதல் போக்கையே கையாண்டார் . எட்டப்ப நாயக்கருடன் வேகிளியார் குல சில்லவார்களுடன் சண்டை , ராம்நாடு மறவர்களுடன் சண்டை , தஞ்சை கவரைகள் உடன் சண்டை , செஞ்சி பலிஜ செட்டிகளிடம் சண்டை, பாளையதாருடன் நட்புணர்வு குறைப்பு , பார்பனர்களை பெரிய பொறுப்பில் நிறுத்துவது போன்ற தவறுகளை திருமலை நாயக்கர் தனது ஆட்சி காலத்தில் செய்தார் .
சென்னப்ப நாயக்கர் செப்பேடு :
மைசூரை கைபற்றிகொண்டு மதுரைப்படைகள் மைசூர் அரண்மனையில் இருந்தன , மைசூரின் மீது தாக்குதலுக்கு மைசூர் அரசே காரணம் என்பதால் படைசெலவுகளுக்கு மைசூரே பொறுப்பு கொள்ள வேண்டும் மேலும் மதுரை படைகளை தாக்கியதால் அபராதமாக 3 லட்சம் வராகன்களை அபராதத் தொகையாக பெற்றுக்கொண்டேன் - சேனாதிபதி சென்ன கதிரி நாயக்கர் - கன்னிவாடி .
கம்பளத்தான் குதிரையை விட்டு இறங்கக்கூடாது என்று பழமொழியே உள்ளன , கம்பளதாராக பிறந்துவிட்டால் போருக்கு பயப்படும் பழக்கம் இல்லை , நாணயம் இல்லாத ராமப்பய்யனை மதுரையில் இருந்து நீக்கிவிட்டு சொந்த சாதியில் ஒருவரை நியமிக்கும்படி கதிரி தெரிவித்தார் .
இப்போர் முடியும் நிலையில் திருமலை நாயக்கர் உடல்நலம் சரியில்லாமல் இறந்தார். அவரின் தம்பி குமார முத்து நாயக்கர் அரியணை ஏற ஆசைபட்டார் ஆனால் அதனை எந்த பாளையங்களும் விரும்பவில்லை எனவே அவரின் மூத்த மகன் முத்துவீரப்பன் நாயக்கர் அரசர் பதவி ஏற்றார் . குமாரமுத்து நாயக்கருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் , சிவகாசி பகுதிகளை தந்து சமாதன படுத்தினார் .

No comments:
Post a Comment