திருமலை நாயக்கர் பேரன் சொக்கநாதன் நாயக்கர் பட்டத்துக்கு வந்தபோது வயது 16 தான் . அவரின் தந்தை முத்துவீரப்ப நாயக்கர் பட்டத்துக்கு வந்த ஒரே வருடத்தில் காலமானார் . சொக்கநாத நாயக்கர் ஆட்சிக்காலத்தில் மதுரையில் இருந்து தலைநகரம் திருச்சிக்கு மாற்றப்பட்டன . விருமாண்டி என்ற கள்ளர் இனத்தவனை மதுரை கோட்டை காவலுக்காக நியமித்தார் . மதுரையின் பாதுக்காப்பை கண்ணிவாடிப் பாளையம் பெற்று இருந்தது . சொக்கநாதருக்கு சிறுவயது என்பதால் மீசை அரும்பாத மன்னர் சண்டைக்கு கிளம்புவதைக்கண்டு பெருவாரியான வாலிபர்கள் பாளையப் படைகளில் சேர்ந்தனர் . கள்ள நாட்டில் நூற்றுக்கணக்கானோர் வளரி , வேல் கம்புகளோடு மதுரை படையில் சேர்ந்தனர் .
பிஜ்ப்புரின் படைகள் செஞ்சியக் கைபற்றிகொண்ட நிலையில் மதுரையை தாக்க வருவதை தடுக்கவே பெருவாரியாக வீரர்களை மதுரை படைகளில் சேர்த்துக்கொண்டு இருந்தது . தளவாயாக வேங்கட கிருஷ்ணன் நாயக்கர் செயல்பட்டார் . ஒருவேளை விதி சதி செய்து விட்டால் உடன்கட்டை ஏற வேங்கடரின் மனைவி பொம்மதேவியும் போருக்கு வந்து இருந்தாள்.
பிஜ்புரின் படைகள் பீரங்கி சுடுவதில் பெயர்போனவை . மதுரையை மட்டும் பிடிப்பது அவர்களுக்கு விருப்பமில்லை தஞ்சையையும் சேர்த்து பிடிக்கவேண்டும் என்பதுவே அவர்களின் எண்ணமாக இருந்தன .
மதுரை படைகளில் கள்ளர்களின் பங்கு முக்கியமானதாக இருந்தன , தஞ்சை கள்ளர்கள் படைமுகாமை தினமும் விடாது கொள்ளியாடிதுக்கொண்டே முற்றுகையை கலைத்துவிட்டனர் . விருமாண்டியின் கள்ளர் படைகள் விடாது கற்கள் எரிந்து பிஜப்பூர் படைகளை ஒரு வழி செய்தது . வளரியை வைத்துக்கொண்டு தாக்குதல் நடத்துவதை இதுவரை பிஜப்பூர் படைகள் பார்த்தது இல்லை என்பதால் தாக்குதலை சமாளிக்க முடியாமல் நின்றன .
கம்பளதார்களில் மந்திரவாதிகள் பிரிவினர் தெலுங்கில் மந்திரங்களை ஓதியவாரே தாக்கிகொண்டு இருந்தனர் , மாதாரி சக்கிலிகளும் வளரி ஏந்திய கள்ளர்களும் இருட்டில் இருந்து தாக்கினர் . கொள்ளிடக்கரை முழுவதும் " ஜெய ஜக்கம்மா , ஜக்கம்மா என்ற கூகுரலே எழும்பி இருந்தன .."
கிழக்கில் இருந்து விருபாட்சி பாளையத்தை சேர்ந்த திருமலை சின்னப்பா நாயக்கரின் தலைமையில் குதிரைபடைகள் இதே வடிவில் அலை அலையாய் எழும்பி வந்தன . மதுரை படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பிஜப்பூர் சரணடைந்தது . இந்த சண்டை காவிரி ஆற்றங்கரையில் ஏற்பட்டதால் இதில் பங்குகொண்ட கள்ளர் இனத்தவர்கள் பிற்காலத்தில் காவிரி வகையறா என்று அழைக்கப்பட்டனர் .
No comments:
Post a Comment