தென் இந்தியாவிலேயே பெரும்பான்மை சமுகம் நாயக்கர் சமுகம் , காப்பு குல நாயக்கர் , நாயுடு , ரெட்டியார் , கவுண்டர் , கவுடர் , செட்டி இனத்தவர்களே ஒற்றுமையாக நாம் இருந்தால் உலகையே ஆளலாம் . ஆள பிறந்த சமுகமே , கண்ணன் வழி வந்த இனத்தவர்களே , ராமாயண மகாபாரத புராண பெருமை கொண்டவர்களே , தெலுங்கு கன்னடம் தமிழ் பேசும் வீர குலமே ,, அணிதிரளும் நாள் வந்துவிட்டது . கூட்டம் இல்லாத சமுகமெல்லாம் கும்மரிச்சம் போட்டுக்கொண்டு இருக்கின்றது , பெரும்பான்மையாக இருந்தும் பொறுமை எதற்கு ? நாயக்கர் நாயுடு குலமே களம் காண வாருங்கள் மீண்டும் ஒரு விஜயநகர பேராசை நிறுவுவோம் .

Friday, 20 July 2012

மைசூர் படைகளின் முதல் தாக்குதல் :


தொட்டி குடுப்பு விழா :
வைகையோடு கொட்டக்குடி ஆறு கலக்குமிடத்தில் தான் " தொட்டி குடுப்பு" விழா வழக்கமாக நடைபெறும் .பவுர்ணமியன்று இவ்விழா நடப்பது வழக்கம் . தமிழகத்திற்கு வந்த காப்பு குல வடுகர்களை தமிழர்கள் தொட்டியர் என்றும் கம்பிளி மரியாதைக்கு உரியவர்கள் என்பதாலும் மேலும் கம்பள நாட்டில் இருந்து வந்ததால் கம்பளத்தார் என்றும் சொல்லியே பழக்கப்பட்டுவிட்டனர். கம்பளத்தார் என்பது ஒரு இடப்பெயரே  அல்லாமல் அது சாதி பெயராக கணக்கில் கொள்ளாத காலம் அது , பிறகு மக்கள் தொகையில் அதிகம் ஆனவுடன் தங்கள் குலங்களுக்கு உள்ளேயே திருமணம் செய்துக்கொண்டு தனி தனி பிரிவினராக ஆனார்கள் . 


இரு நதிகளின் கரைகள் எங்கும் பெருந்திரளாக மாட்டு மந்தைகள் தனித்தனியே நின்றிருந்தன . கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் மாடுகளாகவே இருந்தன , கல் அடுப்புகளில் பொங்கல் பானைகள் பொங்கிக்கொண்டு இருந்தன . கண்ணிவாடிக்கு தெற்கில் இருந்த 11 பாளயத்திலிருந்து மாடுகள் வந்து சேர்ந்தன . வீட்டு தேவைக்கு மேல் இம்மாடுகளில் இருந்து பால் கறக்கமாட்டார்கள் . பொலிஆவுகள் குளிபாட்டபட்டு கம்பிளியின் மீது நிறுத்தப்பட்டன . கன்னிப்பெண்கள் இவ்விழாவில் கலந்துகொள்ள அனுமதி இல்லை . 


பொங்கல் , பழம் முதலியவை பொலிஆவுகலுக்கு வழங்கப்படும் , உருமிக்காரன் வீட்டின் சரித்திரத்தையும் , குல பெருமைகளையும் பாடுவான் , பூஜை முடிந்ததும் உறவுக்காரர்களுக்கு பந்தி வைப்பர். 


வேகிளியார் , வல்லக்கவார் குலங்களே மேற்கு பகுதியில் அதிகம் இருந்ததால் அவர்களின் மந்தைகள் பெருந்திரளாக வந்திருந்தன . கோம்பை பாளையத்து ஒக்கலிக கம்பள காப்பிலிய கவுண்டர்கள் மந்தைகளும் வந்திருந்தன . வடகரை பாளையத்தில் இருந்து பலிஜர் மாடுகளும் வந்து இருந்தன . தமிழகத்துக்கு வந்ததும் பலிஜாக்களுக்கு கம்பளத்தார் சடங்குகள் தான் மேலும் பெண் கொடுத்து பெண் எடுத்து பழைய நிலையில் சேர்ந்துவிட்டதால் அவர்களின் ஆவுகளுக்கும் கம்பளத்து மரியாதை தான் . 


மதுரை அரசராக இருந்த வேங்கட கிருஷ்ணா நாயக்கர் தேவதானபட்டிக்கு விழா காண வந்திருந்தார் . நன்கு நடந்துக்கொண்டு இருந்த விழாவின்போது மைசூர் படைகள் மதுரையை தாக்க வருகின்றன . 


மைசூர் அரசன் ராஜா உடையார் விஜயநகரில் இருந்து விடுபட்ட சுதந்திர நாடாக மைசூரை அறிவித்துவிட்டான் . மதுரை அரசின் மேற்குபுறக் கோட்டைகளைக் கைப்பற்றுவதற்காக ஒரு பெரும் படையை அனுப்பினான் . மைசூர் தளபதி முகிலன் மலை தாண்டியதும் குறிப்பாக எந்த பாளையத்து கோட்டைகளையும் தாக்காமல் மதுரை பாதையில் வந்துக்கொண்டு இருந்தான் . 


மைசூர் படைகள் மலையிறங்கும் முன்பே சத்தியமங்கலம் கோட்டையிலிருந்து திருச்சிக்கும் மதுரைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது . கன்னிவாடி பாளையக்காரர் ரங்கண்ண நாயக்கர்தான் திண்டுக்கல் பாளையங்களின் தலைவர் என்பதால் மதுரை அரசிடம் அனுமதிபெறாமலேயே அருகில் இருந்த படைகளோடு மைசூர் படைகளை தாக்கக் கிளம்பிவிட்டார் . அவருக்கு வயது 33 . திண்டுக்கல் கோட்டை கன்னிவாடி பொறுப்பில் தான் இருந்தது என்பதால் எப்பொழுதும் அவர் அங்கு தான் இருப்பார் . 15 வயதான சென்ன கதிரியை குதிரை அணிகளுக்கு தலைவராக்கினார் . அம்மாவும் மகனும் சேர்ந்து கண்ணிவாடிப் பாளையத்தை நிர்வாகித்தனர் . 


மைசூர் படைத்தளபதி முகிலன் சத்தியமங்கலம் தாண்டி இருபது கல் வந்து அரசூருக்கு அருகில் தாவாளம் அடித்து இருக்கும் தகவல் வந்தது , கன்னிவாடி ரங்கண்ணா நாயக்கரும் , விருபாச்சி திருமலை சின்னப்பா நாயக்கரும் இரவில் மைசூர் படைகளை தாக்க திட்டமிட்டு இருந்தனர் . தாராபுரம் பாளையக்காரர் கொண்டாம நாயக்கர் மலை அடிவாராக் கோட்டையிலிருந்து தாக்க திட்டமிட்டு இருந்தார் . 




அந்தி சாய்ந்ததும் முகிலனைச் சுற்றி மதுரை படைகள் தாக்க நெருங்கின . தெற்கிலிருந்து தாராபுரமும் , தென்மேற்கே பவானிக் கரையிலிருந்து தண்ட நாயக்கர் கோட்டைப் படைகளும் , மதுரையின் நிலைபடையினர் ஏறகொல்லா படைகளும் . மேற்கே சத்தியமங்கலம் கோட்டையிலிருந்தும்  , வடக்கே அந்தியூர் கோட்டையிலிருந்தும் , வடகிழக்கே சங்ககிரி கோட்டையிலிருந்தும் வந்து முகிலனை வளைத்து உத்தரவுக்காக காத்து இருந்தனர் . 


கம்பள படைகளின் தாக்குதலைக் கண்டு வந்த வழியே முகிலன் மற்றும் அவனது படைவீரர்கள் பின்வாங்கினர் , மைசூர் வீரர்கள் அணிவரிசை குலைந்து சிதறினர் . ரங்கண்ணா நாயக்கரின் படைவீரர்கள் கண்ணில் பட்ட மைசூர் வீரர்களை வெட்டி சாய்த்தனர் . 


தேவதானப்பட்டி வீரர்கள் தான் பலர் இந்த போரில் இறந்தனர் . குதிரை அணி தலைவராக 15 வயதான கன்னிவாடி இளவரசன் சென்ன கதிரியை விட இரண்டு வயது இளையவனாக 13 வயதாகும் பூனேரி வேங்கட கிருஷ்ணன் சேந்தமங்கலம் பகுதியில் இருந்து குதிரை அணிகளோடு வந்து இருந்ததை கண்டு வியந்து மதுரை அரசர் , அச்சிறுவனின் குடும்பத்துக்கு சேந்தமங்கலம் அருகிலேயே சில ஊர்களை பரிசாக தந்து நிர்வாக்கிக்க செய்தார் , தங்களது உயரிய பட்டமான திருமலை என்ற பட்டதுடன் ஊர் அமைத்து நிர்வாக்கிக்க செய்தார் , இதுவே பிற்காலத்தில் திருமலை பட்டி என்றானது . நாமக்கல் மாவட்டத்தில் தற்போது உள்ளது . 


ரங்கண்ணா நாயக்கரை முத்து வீரப்ப நாயக்கரும் , திருமலை நாயக்கரும் பாராட்டி விழா நடத்தினர் . அதில் அவருக்கு " சின்ன மைசூரான்" என்ற பட்டதை வழங்கினர் . விருபாட்சி பாளையக்காரர் திருமலை குப்பள சின்னப்பா நாயக்கருக்கு " பாதைக்காவலர் " என்ற பட்டத்தையும் வழங்கினர் . 

1 comment: