தென் இந்தியாவிலேயே பெரும்பான்மை சமுகம் நாயக்கர் சமுகம் , காப்பு குல நாயக்கர் , நாயுடு , ரெட்டியார் , கவுண்டர் , கவுடர் , செட்டி இனத்தவர்களே ஒற்றுமையாக நாம் இருந்தால் உலகையே ஆளலாம் . ஆள பிறந்த சமுகமே , கண்ணன் வழி வந்த இனத்தவர்களே , ராமாயண மகாபாரத புராண பெருமை கொண்டவர்களே , தெலுங்கு கன்னடம் தமிழ் பேசும் வீர குலமே ,, அணிதிரளும் நாள் வந்துவிட்டது . கூட்டம் இல்லாத சமுகமெல்லாம் கும்மரிச்சம் போட்டுக்கொண்டு இருக்கின்றது , பெரும்பான்மையாக இருந்தும் பொறுமை எதற்கு ? நாயக்கர் நாயுடு குலமே களம் காண வாருங்கள் மீண்டும் ஒரு விஜயநகர பேராசை நிறுவுவோம் .

Saturday, 21 July 2012

பெண்ணுக்காக தஞ்சையிடம் சொக்கநாதர் மேற்கொண்ட போர் :


தஞ்சாவூர் அரசர் விஜயராகவ நாயக்கர் மகா பக்தர் , வைணவர் , அவரது நாளின் பெரும்பகுதியை பூஜைகளில் செலவு செய்தார் , மீதி வேலையை ஏடுகளை படிப்பதிலும் கழித்தார் . நீதிமான் . தனது வாழ்நாளில் பொய் கூறாததை செயல்படுத்தியவர் , தர்மம் செய்வதில் விருப்பம் உடையவர் , விஷ்ணுவுக்கு கோவில் இல்லாத ஊர்களில் எல்லாம் தஞ்சை மண்ணில் கோவில் அமைத்தார் . அதில் பெரியது " மன்னார்குடி ராஜகோபலசாமி கோவில் ".


தஞ்சையில் இவரது காலத்தில் பஞ்சம் ஏற்பட்டது , மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர் , இவர் பிராமணர்களுக்கு போஜனம்  செய்வதிலும் , கடவுளுக்கு பூஜை செய்வதிலும் இருந்தார் , மக்கள் படும் பஞ்சத்தில் கவனம் செய்யவில்லை என்பதால் பெருவாரியான மக்கள் மதுரையை நோக்கி வந்துக்கொண்டு இருந்தனர் , அவர்களுக்கு சொக்கநாத நாயக்கரும் கஞ்சித்தொட்டி அமைத்து பாதுகாத்துவந்தனர் . இந்த காலத்தில் தான் காரைக்கால் பிரெஞ்சுக்கார்களும் , தரங்கம்பாடி டேனிஷ்களும் இப்பகுதிக்கு வியாபாரத்துக்காக வந்தனர் . ஆனால் நாகப்பட்டினம் பிரெஞ்சு மக்களுக்கு உணவளிப்பதாக கூறி பலரை அடிமை வேலைக்காக பல நாடுகளுக்கு அனுப்பிக்கொண்டு இருந்தது . 


மதுரை மன்னர் சொக்கநாத நாயக்கர் தஞ்சை மன்னரை பார்த்தது இல்லை எனவே வணிகர் வேடத்தில் சென்று மன்னரை கண்டுவரலாம் என்று  வேடத்தில் செல்கிறார் , தன்னை துவாரசமுத்திர லிங்ககட்டி வைசியர் பிரிவினர் என்று அறிமுகபடுதிக்கொண்டு சென்றார் , மன்னரும் பூஜைகள் முடிந்து வெளியில் வந்தார் , வெகுதொலைவில் இருந்து சொக்கநாதர் மன்னரை கண்டார் , மன்னருக்கு பின்னால் அழகே உருவான ஒரு பெண் வருவதைக்கண்டு விசாரித்தார் , அவர் தான் தஞ்சை இளவரசி மோகனாங்கி என்ற மங்கம்மா என்பதை அறிந்தார் . இளவரசியை கண்டதும் சொக்கநாதருக்கு காதல் வந்துவிட்டது . திருச்சிக்கு சென்றும் கூட மங்கம்மாவின் நினைவாகவே இருந்தார். 


தனது நிலையை தளபதி வெங்க கிருஷ்ணா நாயக்கரிடம் தெரிவித்தார் . வேங்கடரோ சொக்கநாதர் இவ்வளவு மகிழ்ச்சியில் இருப்பதை இதுவரை கண்டதில்லை , கண்ணன் பிறந்த குலத்திலே பிறந்துவிட்டு கோபியர்களோடு கொஞ்சி மகிழாமல் ஒருத்தியையே நினைத்துக்கொண்டு இருக்கும் சொக்கநாதரை கண்டு வியந்தார்  வேங்கட நாயக்கர் . 


தஞ்சைக்கு மங்கள முழக்கங்களோடு , பல வகை சீர்களோடு வேங்கட நாயக்கர் சொக்கநாதருக்கு பெண் கேட்பதற்கு தஞ்சைக்கு செல்கிறார் . மதுரையும் தஞ்சையும் இணைந்தால் பாதுசா படைகள் தென்பகுதிக்கே வரமுடியாது என்ற மகிழ்ச்சியில் தஞ்சைக்கு சென்றார் . 



பூஜை அறையிலிருந்து வந்த விஜயராகவ நாயக்கரிடம் தான் வந்த நோக்கத்தை வேங்கட நாயக்கர் தெரிவித்தார் . வெறித்த பார்வையோடு விஜயராகவர் மாலை வரும்படி கூறி விடை கொடுத்து அனுப்பினார் . தனது குலதெய்வமான கவுரியின் முன் அமர்ந்து இளவரசி மங்கம்மா ருத்ரவீனையை மீட்டுக்கொண்டு இருந்தாள். அந்தப்புர கண்ணிகைகள் ஓடி வந்து " மதுரை மகாராணி , மதுரை மகாராணி " என்று உற்சாகத்தில் கூவினர் . 


பெண்கேட்டு சொக்கநாதர் வந்ததும் , மாறுவேடத்தில் தன்னை காண வந்ததை அறிந்த மங்கம்மா வெட்கம் கொண்டாள் . விஜயராகவர் தனது மனைவியிடம் முடிவை கேட்டார் . அவள் " ஏற்கனவே தஞ்சையில் இருந்து திருமலை நாயக்கருக்கு மனைவியாக சென்ற ரகுநாதம்மகாரு அங்கு சென்று தற்கொலை செய்துகொண்டாள், எனவே மதுரை நமக்கு ராசியில்லை என்றாள்" . பிறகு தனது மைத்துனர் ரங்கப்ப நாயக்கரிடம் தெலுங்கில் கேட்டார் அவரோ " கம்பளதார்களுக்கும் பலிஜா குலத்துக்கும் திருமண பந்தம் நின்று வருடங்கள் பல ஆகிவிட்டன , அவர் அவர் குலங்களில் திருமணம் செய்யும் இந்த நிலையில் இது தேவையில்லாதது " என்றார் . 


பிறகு தனது பூஜை அறைக்குள் தபோநிதி சோமசுந்திர சுவாமிகளிடம் கேட்டார் , அவரோ மதுரைக்கு மங்கம்மா சென்றால் அது அவளின் பாக்கியம் , மேலும் சொக்கநாத நாயக்கர் வீரரோடு மட்டும் அல்லாமல் நல்ல பண்புள்ளவர் என்று கூறினார் . மங்கம்மா சொக்கநாதரை கண்டதே இல்லை ஆனால் காதல் வயப்பட்டாள். 


அன்று மாலை கம்பிளியில் விஜயராகவர் அமர்ந்தார் , முடிவுக்காக அனைவரும் காத்திருந்தனர் . " தஞ்சை , மதுரை ராஜ்யங்கள் 150 வருடங்களாக நல்ல உறவில் இல்லை எனவே பெண் தர விருப்பம் இல்லை என்றார் " . வேங்கட கிருஷ்ணர் இதை எதிர்பார்க்கவில்லை , " மண உறவின் மூலம் நாம் இணைந்துவிடலாம் என்று கேட்டுப்பார்த்தார் " . தஞ்சை தளவாயும் , விஜயராகவர் மைத்துனருமான ரங்கப்ப நாயக்கரின் மகன் ரங்கநாதனுக்கு மங்கம்மாவை திருமணம் செய்துவைத்தால் தஞ்சையின் சொத்து எப்பொழுதும் காக்கப்படும் என்பதுவே மைத்துனரின் நோக்கம் இதனால் இந்த திருமணத்தை நிறுத்த பாடுபட்டு வெற்றி கொண்டார் . ஆனால் தஞ்சை ராஜ்யமே காப்பு தொழுவர் வம்சத்தை சேர்ந்த அச்சுத தேவராயர் தனது மனைவியின் குடும்பத்துக்கு பெண் சீராக தந்த ராஜ்யமே தஞ்சை ராஜ்ஜியம் . 


சோர்வோடு வேங்கட நாயக்கர் திருச்சிக்கு சென்று நடந்ததை சொக்கநாத நாயக்கரிடம் தெரிவித்தார் . சொக்கனாதனால் மங்கம்மாவை மறக்க முடியவில்லை அவளையே நினைத்துக்கொண்டு இருந்தான் . மங்கம்மாவின் தோழிகள் மூலம் சொக்கனாதனுக்கு கடிதம் ஒன்று வந்தது , அதில் மங்கம்மா சொக்கனை தான் விரும்புவதாகவும் , மதுரைக்கு வரவே விரும்புவதாகவும் இருந்ததை கண்டு மகிழ்ச்சியில் குதித்தார் சொக்கநாதர் . பதில் கடிதத்தில் " தஞ்சை வென்று ராஜமரியாதையோடு மதுரைக்கு மனைவியாக மங்கம்மாவை கொண்டு வருவேன் என்று எழுதினார் " . 


வேங்கட கிருஷ்ணா நாயக்கர் , கன்னிவாடி ரங்கண்ணா நாயக்கர் பெரும்படையோடு வல்லம் கோட்டையை தாக்க வருகின்றன . சென்ன கதிரி நாயக்கரின் குதிரை வீரர்களும் , மணப்பாறை படைகள் பெத்த நல்லம நாயக்கர் தலைமையிலும் , ராமகிரி பாளையக்காரர் சாமைய நாயக்கர் படைகளும் , தொட்டியன்கோட்டை படைகள் ஒவுழு நாயக்கர் தலைமையிலும் மதுரை படைகளில் சேர்ந்துக்கொண்டே இருந்தன . 


ரங்கண்ணா நாயக்கருக்கு வயது 88 அவரால் தற்போது குதிரை ஏற முடியாது எப்படியாவது போரில் தான் இறக்க வேண்டும் என்று இந்த போருக்கு முடியாமல் வந்துவிட்டார் . மதுரை வீரர்கள் காட்டாற்று நீர் போல தெற்கு வாசலை நோக்கி வந்தனர் , பெரும்படைகளை சமாளிக்க முடியாமல் சமாதானம் ஆவதாக வல்லம் முரசுகள் அறிவித்தன . இச்சண்டையில் பங்குபெற்ற கள்ளர் குலத்துக்கு வல்லம் வகையறா என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்டனர் . 


போருக்குப் பின்வாங்குவது சத்திரியர் தர்மம் இல்லை என்று விஜயராகவ நாயக்கரும் போருக்கே ஆசைப்பட்டார் , தஞ்சாவூரில் இருக்கும் கம்பளதார்களுக்கு சிந்த புலிவாரு என்பது வீட்டின் பெயர் , அவர்கள் தங்களை தொழுவ நாயக்கர் என்று அழைத்துக்கொண்டனர் அவர்கள் தங்களை பலிஜாவாரு என்றே அடையாளபடுத்திக்கொண்டு வாழ்கின்றனர். அவர்களுக்கு தலைவராக அக்கையா ராஜு தலைமையிலான தஞ்சை படையினர் எவ்வளவு பேர் முயன்றும் மதுரையிடம் தோற்றனர் . தஞ்சை அரண்மனைக்கு சென்று இளவரசியை தேடினார் வேங்கட நாயக்கர் . 


மகாராணி ( மங்கம்மாவின் அன்னை ) தூரத்தல் தோழிகளோடு இருப்பதை கண்டார் , வேங்கடரை கண்டதும் தனது குறுவாளை எடுத்து தன் நெஞ்சுக்கு நேரே பிடித்தபடி கத்தினாள் " நெருங்காதே " . பதறிய வேங்கடர் " அம்மா , நான் பகைவனில்லை உங்கள் சேவகன் , மதுரை , தஞ்சை போர் வெற்றி தோல்வி இல்லாமல் முடிந்தது , இளவரசியை மகாராணியாக மதுரைக்கு அழைத்து செல்லவே வந்துள்ளோம் என்றார் " . 


இளவரசிக்கு மதுரை ராணியாக வரவே விருப்பம் என்பதையும் தெரிவித்தார் . அவளை மட்டும் அழைத்து செல்லும்படி மகராணி தெரிவித்தார் . அதற்குள் மதுரை வீரர்கள் ஜெய ஜெய ஜக்கம்மா என்ற விஜய கோசத்தை கூச்சல் இட்டனர் , இதைக்கேட்ட மகாராணி தஞ்சை தோற்றுவிட்டதை அறிந்து தனது குறுவாளால் எடுத்து தனது நெஞ்சில் பாய அப்படியே இறந்தாள் , பதறி வந்த இளவரசி மங்கம்மாவும் செய்வது அறியாமல் தானும் குறுவாளால் நெஞ்சை அறுத்து மாண்டாள் . 


போரில் தோற்கும்போது இசுலாமியர்கள் கையில் சிக்கிவிடாமல் அந்தப் புரத்தை அழிப்பது காப்புக்களின் குல வழக்கம் , அதனையே தஞ்சை பலிஜார்களும் செய்தனர் . விஜயராகவரும் வேங்கடரும் கோபத்தில் பேசிக்கொண்டு இருந்தனர் , போரில் தனது சொந்த இனத்தவருடன் தோற்றுவிட்டோமே என்ற மன வேதனையில் ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா என்று சொல்லியே விஜயராகவர் பித்து பிடித்தார் . 


பெண்ணுக்காக சொந்த உறவுக்களுக்குள் இரு ராஜ்யங்கள் சண்டைப்போட்டுக் கொண்டதை வரலாற்றின் வியப்பில் ஒன்றாக இன்றும் நினைவு கொள்ளபடுகிறது. 

சொக்கநாத நாயக்கர் ஆட்சிக்காலத்தில் மைசூர் போர்கள் :


திருமலை நாயக்கர் பேரன் சொக்கநாதன் நாயக்கர் பட்டத்துக்கு வந்தபோது வயது 16 தான் . அவரின் தந்தை முத்துவீரப்ப நாயக்கர் பட்டத்துக்கு வந்த ஒரே வருடத்தில் காலமானார் . சொக்கநாத நாயக்கர் ஆட்சிக்காலத்தில் மதுரையில் இருந்து தலைநகரம் திருச்சிக்கு மாற்றப்பட்டன . விருமாண்டி என்ற கள்ளர் இனத்தவனை மதுரை கோட்டை காவலுக்காக நியமித்தார் . மதுரையின் பாதுக்காப்பை கண்ணிவாடிப் பாளையம் பெற்று இருந்தது . சொக்கநாதருக்கு சிறுவயது என்பதால் மீசை அரும்பாத மன்னர் சண்டைக்கு கிளம்புவதைக்கண்டு பெருவாரியான வாலிபர்கள் பாளையப் படைகளில் சேர்ந்தனர் . கள்ள நாட்டில் நூற்றுக்கணக்கானோர் வளரி , வேல் கம்புகளோடு மதுரை படையில் சேர்ந்தனர் . 


பிஜ்ப்புரின் படைகள் செஞ்சியக் கைபற்றிகொண்ட நிலையில் மதுரையை தாக்க வருவதை தடுக்கவே பெருவாரியாக வீரர்களை மதுரை படைகளில் சேர்த்துக்கொண்டு இருந்தது . தளவாயாக வேங்கட கிருஷ்ணன் நாயக்கர் செயல்பட்டார் . ஒருவேளை விதி சதி செய்து விட்டால் உடன்கட்டை ஏற வேங்கடரின் மனைவி பொம்மதேவியும் போருக்கு வந்து இருந்தாள். 


பிஜ்புரின் படைகள் பீரங்கி சுடுவதில் பெயர்போனவை . மதுரையை மட்டும் பிடிப்பது அவர்களுக்கு விருப்பமில்லை தஞ்சையையும் சேர்த்து பிடிக்கவேண்டும் என்பதுவே அவர்களின் எண்ணமாக இருந்தன . 


மதுரை படைகளில் கள்ளர்களின் பங்கு முக்கியமானதாக இருந்தன , தஞ்சை கள்ளர்கள் படைமுகாமை தினமும் விடாது கொள்ளியாடிதுக்கொண்டே முற்றுகையை கலைத்துவிட்டனர் . விருமாண்டியின் கள்ளர் படைகள் விடாது கற்கள் எரிந்து பிஜப்பூர் படைகளை ஒரு வழி செய்தது . வளரியை வைத்துக்கொண்டு தாக்குதல் நடத்துவதை இதுவரை பிஜப்பூர் படைகள் பார்த்தது இல்லை என்பதால் தாக்குதலை சமாளிக்க முடியாமல் நின்றன . 


கம்பளதார்களில் மந்திரவாதிகள் பிரிவினர் தெலுங்கில் மந்திரங்களை ஓதியவாரே தாக்கிகொண்டு இருந்தனர் , மாதாரி சக்கிலிகளும் வளரி ஏந்திய கள்ளர்களும் இருட்டில் இருந்து தாக்கினர் . கொள்ளிடக்கரை முழுவதும் " ஜெய ஜக்கம்மா , ஜக்கம்மா என்ற கூகுரலே எழும்பி இருந்தன .." 


கிழக்கில் இருந்து விருபாட்சி பாளையத்தை சேர்ந்த திருமலை சின்னப்பா நாயக்கரின் தலைமையில் குதிரைபடைகள் இதே வடிவில் அலை அலையாய் எழும்பி வந்தன . மதுரை படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பிஜப்பூர் சரணடைந்தது   . இந்த சண்டை காவிரி ஆற்றங்கரையில் ஏற்பட்டதால் இதில் பங்குகொண்ட கள்ளர் இனத்தவர்கள் பிற்காலத்தில் காவிரி வகையறா என்று அழைக்கப்பட்டனர் . 

திருமலை நாயக்கரின் ஆட்சியில் போர்கள்


பெரும் பொருட்செலவில் மதுரையின் கிழக்கு கோபுரத்தை நாயக்க மன்னர்கள் கட்டி முடித்தனர் . விஜயதசமிக்கு முதல்நாளில் கம்பளத்தார்கள் கோபூஜை ஆரம்பித்தனர் . எல்லா குலத்தவர்களின் பொலிஆவுகலும் கம்பிளியில் வரிசையாக நிற்க தொடங்கின . உறுமியும் பாட்டுமாக வழிபாட்டை தொடர்ந்தார்கள் . கொம்புகளை குலுக்கிக்கொண்டு பொலிஆவுகள் பொறுமையாய் நின்றிருந்தன . சாமி மாடுகள் விலகியதும் கம்பளத்தை சுருட்டிவிட்டு கால் சலங்கயோடு தேவராட்டகாரர்கள் களத்தில் இறங்கினர் , மன்னர் திருமலை நாயக்கரும் முதல் வரிசையில் நின்று ஆடினார் . பாளயக்காரர்களுக்குள் தேவராட்டதில் கடும்போட்டி இருந்தன . 


முத்துவீரப்ப நாயக்கரின் மறைவிற்கு பிறகு திருமலை நாயக்கர் அரசராகி 32 ஆண்டுகள் கடந்து இருக்கும் நிலையில் நாடெங்கும் கோவில்களும் , கோபுரங்களும் ஏராளமாக எழுந்தன , ஆடம்பர பிரியராக திருமலை நாயக்கர் இருந்தார் தனக்கும் நாயக்க மக்களுக்கும் விலை உயர்ந்த ஆடைகள் அணிவதற்காக குஜராத் பகுதியில் இருந்து அழைத்துவரப்பட்ட சௌராஷ்டிரா இன மக்களை மதுரையில் குடியமர்த்தினார் . இத்தாலி பொறியாளார் ஒருவரின் திட்டப்படி பெரும் அரண்மனை ஒன்றை கோட்டையின் தென்கிழக்கு மதிலை ஒட்டிக்கட்டினார் . தலைநகரை திருச்சியில் இருந்து மதுரைக்கு மாற்றினார் , மதுரையை சுதந்திர நாடாக அறிவித்துவிட்டார் . மஞ்சள் நிற நந்திக்கொடி நாடெங்கும் பறக்கவிடப்பட்டது . 




மதுரை கொள்ளாத அளவு ஜனத்திரள் வசந்த மண்டபத்தை காண வந்திருந்தது . திருமலை நாயக்கர் அரசரான இரண்டு ஆண்டுகளில் மைசூரின் புதிய மன்னர் சாமராஜா உடையார் 5 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் அடைந்த தோல்விக்கு பழிவாங்க முயன்றார் . 1625 இல் தளபதி நந்திராஜன் தலைமையில் மதுரையை தாக்க படை அனுப்பினார்  . கன்னிவாடி ரங்கண்ணா நாயக்கரும் , ராமப்பய்யாவும் மைசூர் வரை நந்திராஜனை விரட்டி வென்றனர் . பிறகு திருவனந்தபுரம் , ராமநாதபுரம் போரிலும் ரங்கண்ணா நாயக்கரின் சேவையை பாராட்டி திருமலை நாயக்கர் வசந்தமண்டபத்தில் வைத்து பாண்டியரின் சந்திரஹாச வாளை ரங்கண்ணாவுக்கு பரிசாக வழங்கினார் . 


மதுரையின் மாவீரன் ரங்கண்ணா நாயக்கர் என்றும் புகழப்பட்டார். மதுரையில் திருடும் கள்ளர்களுக்கு சவுக்கு அடி தண்டனையையும் , திருந்திய கள்ளர்களுக்கு பாதைக்காவல் உரிமையையும் தருவதற்கு ரங்கண்ணா நாயக்கரே நியமிக்க பட்டார் .


1669 இல் மூன்றாவது முறையாக மதுரை நாட்டுக்குள் மைசூர் பெரும்படையோடு புகுந்தது . மைசூர் அரசன் கந்திரவ நரசனுக்கு பழைய பகமை மட்டுமல்ல புதிய கோபமும் இருந்தது . விஜயநகர அரசன் ஸ்ரீரங்கன் ராயவேலுரையும் இழந்து முதலில் தஞ்சாவுரிலும் பின்னர் மைசூரிலும் தஞ்சம் அடைந்திருந்தனர் . ராயவேலுரில் மீண்டும் ஸ்ரீரங்கனை அரசனாக்க முயற்சியில் மைசூர் ஈடுபட்டது , பிஜப்பூர் படைகள் அதை முறியடித்துவிட்டன அதற்கு உடந்தையாக திருமலை நாயக்கர் இருந்தார் என்பதுவே புதுகோவமாக இருந்தன . 


1620 , 1625 இல் மதுரை இடம் தோற்றத்தைப் போல தோல்வியடைய கூடாது என்று மைசூரின் முரடன் என்று பெயர்பெற்ற ஹம்பையாவின் தலைமையில் தோர்க்க வாய்ப்பே இல்லாத பெரும்படையை மதுரைக்கு மைசூர் அரசர் அனுப்பினார் . திருமலை நாயக்கர் வயது அதிகமானதால் மரணபடுக்கையில் இருந்தார் . இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பிரதானி சோமசுந்திர அய்யர் என்பவனுக்கும் கையூட்டாக பெரும்தொகையை கொடுத்து படைகள் ஒளிந்து இருந்தன . 


மதுரை படைகளை விட பாளையங்களின் படைகளில் தான் வீரர்கள் அதிகமாக இருந்தனர் . இதை அறிந்த ஹம்பையா நாயக்கர் மதுரையை தாக்காமல் பாளையங்களை முதலில் தாக்க திட்டம் தீட்டினார் . ஆனால் பாளையங்கள் பதில் தாக்குதல் கொடூரமாக இருந்ததால் கோபம் அடைந்த ஹம்பையா கண்ணில் காணும் மக்களின் மூக்குகளை எல்லாம் அறுக்கும் படியும் , ஊர்களை நாசம் செய்யும்படியும் உத்தரவிட்டார் . 


திண்டுக்கல் கோட்டையை கன்னிவாடி பாளையக்காரரான ரங்கண்ணா நாயக்கர் நிர்வாகித்து வந்தார் . இக்கோட்டையை மைசூர் படைகள் தாக்க முயன்றன. தந்து 82 வயதிலும் ரங்கண்ணா மதில்மேல் ஏறி படைவீரர்களை ஊக்குவிதுக்கொண்டு இருந்தார் . சோமசுந்திர அய்யரின் சூழ்ச்சியால் மைசூர் படைகள் வந்த செய்தியை அறிந்து ரங்கண்ணா நாயக்கர் சோமசுந்திரத்தை சிறையில் அடைத்தார்.


திருமலை நாயக்கர் , ரகுநாத சேதுபதியை ராமநாதபுரம் பாளையக்காரராக நியமித்த காலம் இது தான் . இதற்கு பிறகு தான் ராமதாபுர நாட்டில் களவு ஒழிந்து அமைதி நிலை பெற்றது . மதுரை படைகளில் 30 ,000 தெலுங்கு கம்பள வீரர்களும் , 5 ,000 கன்னட கம்பள வீரர்களும் , 5 ,000 சக்கிலியர் மாதாரி வீரர்களும் , 10 ,000 மறவர்களும் , 7 ,000 கள்ளர்களும் , 5 ,000 வலயர்களும் , 5 ,000 கவரை இனத்தவர்களும் இருந்தனர் . மேலும் 35 ,000 குதிரைகள் இருந்தன . 


திருமலை நாயக்கரின் தம்பி குமாரமுத்து நாயக்கர் மதுரையிலிருந்து படை நடத்திக்கொண்டு திண்டுக்கல் போனார் .வடுக பாளையங்கள் அணிசேர்ந்து மைசூர் படைகளை சுற்றி வளைத்தன. 


மதுரை படைகளின் தளபதியாக கன்னிவாடி இளவரசர் சென்ன கதிரி நாயக்கர் பொறுப்பேற்றுக்கொண்டார் . மதுரை அரசின் 150 ஆண்டுகால ஆட்சியில் நடந்த உக்கிரமான போர் இது தான் . ராமநாதபுரத்திலிருந்து மறவர்களின் படைகள் பெருந்திரளாக வந்து மைசூர் படைகளை ஒரு வழி செய்தது . 


கோட்டைக்குள் இருந்த ரங்கண்ணா நாயக்கர் படைவீரர்களுக்கு ஊக்கம் அளித்துக்கொண்டே இருந்தார் . யானைப் படைத்தளபதியாக வெள்ளைத் திம்ம நாயக்கர் இருந்தார் யானைகள் அத்துணையும் இழந்தாலும் பராவயில்லை என்று எண்ணி மீண்டும் மீண்டும் மூர்க்கமாக மோத செய்தவாரே இருந்தார் . மதுரை படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஹம்பையா போரை நிறுத்த வெள்ளைக்கொடி காட்டினார் . சென்ன கதிரி நாயக்கரும் போரை நிறுத்தினார் . இரு தரப்பிலும் பெரும் சேதம் ஏற்பட்டது . 


15000 பேருக்கு மேல் மைசூர் படைகளும் , 10000 பேருக்கு மேல் மதுரை படைகளும் வீரர்களை இழந்தனர் . போரில் 58 பாளையங்கள் பங்குகொண்டன , கம்பள பாளயங்களுக்கு உதவியாக தற்போது மறவ பாளையங்களும் சேர்ந்து இருந்தன . ரங்கண்ணா நாயக்கரும் மைசூரின் அரசன் ஸ்ரீரங்கனும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் மைசூருக்கும் , மதுரைக்கும் எப்பொழுதும் சண்டைகள் தான் . 


"வருகிற அமாவாசைக்குள் உன்னுடைய மூக்கை உனது நாட்டில் வைத்தே அறுப்பேன் , கம்பளத்தார் இனத்தில் புல்லுருவியாக இருக்கும் உனது அரசனிடம் சென்று சொல் , அவனது மூக்கையும் அறுப்பேன் என்று ,," என்று ரங்கண்ணா நாயக்கர் கோபத்தோடு கூறினார் 







ஹம்பையாவின் படைகள் சத்தியமங்கலம் சென்று சேர்ந்தன  . படைசெலவுக்கு வராகன் இல்லாமல் மதுரை படைகள் தவித்தன , தனது பாளையமான கன்னிவாடியில் இருந்து 16000 வராகன்களை வாங்கிக்கொண்டு வரும்படி ரங்கண்ணா நாயக்கர் தெரிவித்தார் , மேலும் மதுரையின் தளபதியாக ராமப்பையன் என்ற பார்பன இனத்தவரை திருமலை நாயக்கர் நியமித்தது எந்த பாளயக்கார்களுக்கும் பிடிக்கவில்லை , பூணுல் போட்டுக்கொண்டு பூஜை செய்யும் பார்பனர்களை போருக்கு தலைமை தாங்கவைப்பது யாருக்கும் பிடிக்கவில்லை , சத்திரியராக இருந்துவிட்டு பார்பனர்களுக்கு சலுகைகள் வழங்குவதை எந்த நாயக்கர் பாளையங்களும் விரும்பவில்லை மேலும் மதுரையிடம் செலவுக்கு காசு வாங்குவதையும் நிறுத்திக்கொண்டனர் . 


ரங்கண்ணா நாயக்கர் தனது மகன் சென்ன கதிரி நாயக்கரிடம் மைசூர் படைகள் அவர்களின் ஊர்களை நெருங்கும்முன்னே காவிரியை தாண்டும்முன்னே உயிரை எடுக்காமல் அவர்களின் மூக்கை மட்டும் அறுத்துவிட உத்தரவிட்டார் இதுவே திருமலை நாயக்கர் காலத்து மூக்கறுப்பு போர் என்று வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தது . 
தஞ்சை பலிஜா கவரைகள் கைகளிலும் , மதுரை பலிஜா கம்பளத்தார் கைகளிலும் , செஞ்சி பலிஜா செட்டி கைகளிலும் இருந்த நிலையில் திருமலை நாயக்கர் சுற்று அரசுகளிடம் மோதல் போக்கையே கையாண்டார் . எட்டப்ப நாயக்கருடன் வேகிளியார் குல சில்லவார்களுடன் சண்டை , ராம்நாடு மறவர்களுடன் சண்டை , தஞ்சை கவரைகள் உடன் சண்டை , செஞ்சி பலிஜ செட்டிகளிடம் சண்டை, பாளையதாருடன் நட்புணர்வு குறைப்பு , பார்பனர்களை பெரிய பொறுப்பில் நிறுத்துவது போன்ற தவறுகளை திருமலை நாயக்கர் தனது ஆட்சி காலத்தில் செய்தார் . 


சென்னப்ப நாயக்கர் செப்பேடு :
மைசூரை கைபற்றிகொண்டு மதுரைப்படைகள்  மைசூர் அரண்மனையில் இருந்தன , மைசூரின் மீது தாக்குதலுக்கு மைசூர் அரசே காரணம் என்பதால் படைசெலவுகளுக்கு மைசூரே பொறுப்பு கொள்ள வேண்டும் மேலும் மதுரை படைகளை தாக்கியதால் அபராதமாக 3 லட்சம் வராகன்களை அபராதத் தொகையாக பெற்றுக்கொண்டேன் - சேனாதிபதி சென்ன கதிரி நாயக்கர் - கன்னிவாடி . 


கம்பளத்தான் குதிரையை விட்டு இறங்கக்கூடாது என்று பழமொழியே உள்ளன , கம்பளதாராக பிறந்துவிட்டால் போருக்கு பயப்படும் பழக்கம் இல்லை ,  நாணயம் இல்லாத ராமப்பய்யனை மதுரையில் இருந்து நீக்கிவிட்டு சொந்த சாதியில் ஒருவரை நியமிக்கும்படி கதிரி தெரிவித்தார் . 


இப்போர் முடியும் நிலையில் திருமலை நாயக்கர் உடல்நலம் சரியில்லாமல் இறந்தார். அவரின் தம்பி குமார முத்து நாயக்கர் அரியணை ஏற ஆசைபட்டார் ஆனால் அதனை எந்த பாளையங்களும் விரும்பவில்லை எனவே அவரின் மூத்த மகன் முத்துவீரப்பன் நாயக்கர் அரசர் பதவி ஏற்றார் . குமாரமுத்து நாயக்கருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் , சிவகாசி பகுதிகளை தந்து சமாதன படுத்தினார் . 


Friday, 20 July 2012

மைசூர் படைகளின் முதல் தாக்குதல் :


தொட்டி குடுப்பு விழா :
வைகையோடு கொட்டக்குடி ஆறு கலக்குமிடத்தில் தான் " தொட்டி குடுப்பு" விழா வழக்கமாக நடைபெறும் .பவுர்ணமியன்று இவ்விழா நடப்பது வழக்கம் . தமிழகத்திற்கு வந்த காப்பு குல வடுகர்களை தமிழர்கள் தொட்டியர் என்றும் கம்பிளி மரியாதைக்கு உரியவர்கள் என்பதாலும் மேலும் கம்பள நாட்டில் இருந்து வந்ததால் கம்பளத்தார் என்றும் சொல்லியே பழக்கப்பட்டுவிட்டனர். கம்பளத்தார் என்பது ஒரு இடப்பெயரே  அல்லாமல் அது சாதி பெயராக கணக்கில் கொள்ளாத காலம் அது , பிறகு மக்கள் தொகையில் அதிகம் ஆனவுடன் தங்கள் குலங்களுக்கு உள்ளேயே திருமணம் செய்துக்கொண்டு தனி தனி பிரிவினராக ஆனார்கள் . 


இரு நதிகளின் கரைகள் எங்கும் பெருந்திரளாக மாட்டு மந்தைகள் தனித்தனியே நின்றிருந்தன . கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் மாடுகளாகவே இருந்தன , கல் அடுப்புகளில் பொங்கல் பானைகள் பொங்கிக்கொண்டு இருந்தன . கண்ணிவாடிக்கு தெற்கில் இருந்த 11 பாளயத்திலிருந்து மாடுகள் வந்து சேர்ந்தன . வீட்டு தேவைக்கு மேல் இம்மாடுகளில் இருந்து பால் கறக்கமாட்டார்கள் . பொலிஆவுகள் குளிபாட்டபட்டு கம்பிளியின் மீது நிறுத்தப்பட்டன . கன்னிப்பெண்கள் இவ்விழாவில் கலந்துகொள்ள அனுமதி இல்லை . 


பொங்கல் , பழம் முதலியவை பொலிஆவுகலுக்கு வழங்கப்படும் , உருமிக்காரன் வீட்டின் சரித்திரத்தையும் , குல பெருமைகளையும் பாடுவான் , பூஜை முடிந்ததும் உறவுக்காரர்களுக்கு பந்தி வைப்பர். 


வேகிளியார் , வல்லக்கவார் குலங்களே மேற்கு பகுதியில் அதிகம் இருந்ததால் அவர்களின் மந்தைகள் பெருந்திரளாக வந்திருந்தன . கோம்பை பாளையத்து ஒக்கலிக கம்பள காப்பிலிய கவுண்டர்கள் மந்தைகளும் வந்திருந்தன . வடகரை பாளையத்தில் இருந்து பலிஜர் மாடுகளும் வந்து இருந்தன . தமிழகத்துக்கு வந்ததும் பலிஜாக்களுக்கு கம்பளத்தார் சடங்குகள் தான் மேலும் பெண் கொடுத்து பெண் எடுத்து பழைய நிலையில் சேர்ந்துவிட்டதால் அவர்களின் ஆவுகளுக்கும் கம்பளத்து மரியாதை தான் . 


மதுரை அரசராக இருந்த வேங்கட கிருஷ்ணா நாயக்கர் தேவதானபட்டிக்கு விழா காண வந்திருந்தார் . நன்கு நடந்துக்கொண்டு இருந்த விழாவின்போது மைசூர் படைகள் மதுரையை தாக்க வருகின்றன . 


மைசூர் அரசன் ராஜா உடையார் விஜயநகரில் இருந்து விடுபட்ட சுதந்திர நாடாக மைசூரை அறிவித்துவிட்டான் . மதுரை அரசின் மேற்குபுறக் கோட்டைகளைக் கைப்பற்றுவதற்காக ஒரு பெரும் படையை அனுப்பினான் . மைசூர் தளபதி முகிலன் மலை தாண்டியதும் குறிப்பாக எந்த பாளையத்து கோட்டைகளையும் தாக்காமல் மதுரை பாதையில் வந்துக்கொண்டு இருந்தான் . 


மைசூர் படைகள் மலையிறங்கும் முன்பே சத்தியமங்கலம் கோட்டையிலிருந்து திருச்சிக்கும் மதுரைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது . கன்னிவாடி பாளையக்காரர் ரங்கண்ண நாயக்கர்தான் திண்டுக்கல் பாளையங்களின் தலைவர் என்பதால் மதுரை அரசிடம் அனுமதிபெறாமலேயே அருகில் இருந்த படைகளோடு மைசூர் படைகளை தாக்கக் கிளம்பிவிட்டார் . அவருக்கு வயது 33 . திண்டுக்கல் கோட்டை கன்னிவாடி பொறுப்பில் தான் இருந்தது என்பதால் எப்பொழுதும் அவர் அங்கு தான் இருப்பார் . 15 வயதான சென்ன கதிரியை குதிரை அணிகளுக்கு தலைவராக்கினார் . அம்மாவும் மகனும் சேர்ந்து கண்ணிவாடிப் பாளையத்தை நிர்வாகித்தனர் . 


மைசூர் படைத்தளபதி முகிலன் சத்தியமங்கலம் தாண்டி இருபது கல் வந்து அரசூருக்கு அருகில் தாவாளம் அடித்து இருக்கும் தகவல் வந்தது , கன்னிவாடி ரங்கண்ணா நாயக்கரும் , விருபாச்சி திருமலை சின்னப்பா நாயக்கரும் இரவில் மைசூர் படைகளை தாக்க திட்டமிட்டு இருந்தனர் . தாராபுரம் பாளையக்காரர் கொண்டாம நாயக்கர் மலை அடிவாராக் கோட்டையிலிருந்து தாக்க திட்டமிட்டு இருந்தார் . 




அந்தி சாய்ந்ததும் முகிலனைச் சுற்றி மதுரை படைகள் தாக்க நெருங்கின . தெற்கிலிருந்து தாராபுரமும் , தென்மேற்கே பவானிக் கரையிலிருந்து தண்ட நாயக்கர் கோட்டைப் படைகளும் , மதுரையின் நிலைபடையினர் ஏறகொல்லா படைகளும் . மேற்கே சத்தியமங்கலம் கோட்டையிலிருந்தும்  , வடக்கே அந்தியூர் கோட்டையிலிருந்தும் , வடகிழக்கே சங்ககிரி கோட்டையிலிருந்தும் வந்து முகிலனை வளைத்து உத்தரவுக்காக காத்து இருந்தனர் . 


கம்பள படைகளின் தாக்குதலைக் கண்டு வந்த வழியே முகிலன் மற்றும் அவனது படைவீரர்கள் பின்வாங்கினர் , மைசூர் வீரர்கள் அணிவரிசை குலைந்து சிதறினர் . ரங்கண்ணா நாயக்கரின் படைவீரர்கள் கண்ணில் பட்ட மைசூர் வீரர்களை வெட்டி சாய்த்தனர் . 


தேவதானப்பட்டி வீரர்கள் தான் பலர் இந்த போரில் இறந்தனர் . குதிரை அணி தலைவராக 15 வயதான கன்னிவாடி இளவரசன் சென்ன கதிரியை விட இரண்டு வயது இளையவனாக 13 வயதாகும் பூனேரி வேங்கட கிருஷ்ணன் சேந்தமங்கலம் பகுதியில் இருந்து குதிரை அணிகளோடு வந்து இருந்ததை கண்டு வியந்து மதுரை அரசர் , அச்சிறுவனின் குடும்பத்துக்கு சேந்தமங்கலம் அருகிலேயே சில ஊர்களை பரிசாக தந்து நிர்வாக்கிக்க செய்தார் , தங்களது உயரிய பட்டமான திருமலை என்ற பட்டதுடன் ஊர் அமைத்து நிர்வாக்கிக்க செய்தார் , இதுவே பிற்காலத்தில் திருமலை பட்டி என்றானது . நாமக்கல் மாவட்டத்தில் தற்போது உள்ளது . 


ரங்கண்ணா நாயக்கரை முத்து வீரப்ப நாயக்கரும் , திருமலை நாயக்கரும் பாராட்டி விழா நடத்தினர் . அதில் அவருக்கு " சின்ன மைசூரான்" என்ற பட்டதை வழங்கினர் . விருபாட்சி பாளையக்காரர் திருமலை குப்பள சின்னப்பா நாயக்கருக்கு " பாதைக்காவலர் " என்ற பட்டத்தையும் வழங்கினர் . 

சோழனை அடக்கி மதுரையை கைப்பற்றுவது


புதிய மதுரையை புதுப்பொலிவுடன் நாயக்கர் மன்னர்கள் அமைத்தனர் . மதுரை மீனாட்சி கோவிலில் பூஜைகள் சரியாக நடக்கப்பட்டன . சோழர்களுக்கும் , பாண்டிய சிற்றரசுகளுக்கும் சண்டை வந்ததால் , பாண்டிய மன்னர் சோழனை அடக்க விஜயநகரில் உதவி நாடினார் .கிருஷ்ண தேவ  ராயரும் தனது தளபதியான நாகம நாயக்கரை மதுரைக்கு அனுப்பினார் . நாகமர் வீர சோழனை விரட்டி அடித்து தன்னையே அரசனாக முடி சூடி கொண்டார் . இதனை அறிந்து ராயர் கோபப்பட்டு நாகமரை சிறையில் இடுங்கள் என்று உத்தரவிட்டார் ஆனால் எந்த தளபதிகளும் அதற்கு முன்வரவில்லை , நாகம நாயக்கர் அனைவருக்கும் உறவினர் மேலும் அவருடன் போர் புரிவதை எந்த தளபதிகளும் விரும்பாமல் இருந்தனர் . நாகம நாயக்கரின் மகன் விசுவநாத நாயக்கர் தான் மதுரைக்கு சென்று தந்தையை வென்று வருகிறேன் என்று கூறினார் . 


பெரும்படையை கொண்டு மதுரைக்கு சென்றார் இந்த படையில் கம்பளத்தார்களும் , பலிஜர்களும் , சக்கிளியர்களும் மட்டுமே இருந்தனர் , ஏற்கனவே நாகம நாயக்கர் படையிளிலும் மேல்கூறிய சமுக மக்களே இருந்தனர் , திருச்சியில் இருபடைகளும் தாவாரம் போட்டுள்ளனர் , இரு வீரர்களுக்கும் சண்டைபோடுவதில் எள்ளளவும் விருப்பம் இல்லை காரணம் இருபடைகளிலும் இருப்பவர்கள் பெரும்பாலும் ஊர்க்கார்கள், உறவுக்காரர்கள் , சீமைக்காரர்கள் என்பதால் போர் எதுவும் இல்லாமலேயே நாகம நாயக்கர் விசுவனாதனாயக்கரிடம் அடிபணிந்தார் . 


ராயர் மகிழ்ந்து உனக்கு என்ன வேண்டும் என்று விசுவனாதரிடம் கேட்டார் . அவரோ எனது தந்தையை விடுதலை செய்தாலே போதும் என்றுக்கேட்டுக்கொண்டார் . அதன்படியே ராயரும் செய்து இனி மதுரைக்கு விசுவநாத நாயக்கரே அரசர் என்பதை பிரகடனம் செய்தார் . 


வேகிளியார் குலத்தில் தற்போது நாற்பதாயிரம் வீரர்கள் தான் உள்ளனர் . மீதிப்பேர் போர்க்களத்தில் பலியாகி கொண்டே இருக்கின்றனர் . தேவகிரிக்காக இருநூறு வருடம் , கம்பிளி யுத்தத்தில்  ஐம்பதாயிரம் பேர் இறந்தார்கள் , கம்பள பெண்களை காப்பாற்றுவதற்காக துலுக்கர்களிடம் சண்டையில் பல ஆயிரம் பேர் என்று இறந்துக்கொண்டே இருகின்றனர் என்று விசுவநாத நாயக்கர் தனது நிலையை கண்டு புலம்பினார் . 


வேடர்கள் ஆயர்களாகி , ஆயர்கள் அரசர்களாக , அரசர்கள் வீரர்களாகி என்று இவர்களின் பரிணாமம் விதவித மாக இருந்தன . முரட்டு முகமதியர்களிடம் சண்டை , தேவகிரியை இழந்த கொல்லவார் மக்களுக்கு கம்பள தேசமே தஞ்சம் தந்தது , வேகிளியாரின் கம்பிளி தேசம் கொல்லவார்களுக்கும், தொக்கலவார்களுக்கும் அடைக்கலம் தந்து காப்பாற்றியது . சந்திரகிரி சில்லவார்களும் வேகிளியார்களும் ஒன்று சேர்ந்து விஜயநகரத்தை கட்டி எழுப்பினர் . கொல்லவார் பெண்ணை துலுக்கர் முதலில் தேவகிரியில் கேட்டதே இத்துணை சண்டைகளுக்கும் காரணமாக இருந்தன .


கம்பளத்து மரபில் வருபவர்களுக்கு திருமண பந்தம் கம்பளத்தில் செய்யகூடாது என்ற முறை அந்த காலத்தில் இருந்தன , பெண் எடுப்பதை பெரும்பாலும் பலிஜர் குலத்தில் தான் எடுப்பது வழக்கம் , இப்படி பெண் எடுக்கும் நிலையில் பெண் சீராக பல ஊர்களை பலிஜர்களுக்கு தரப்பட்டது இதனை தடுக்க விசுவநாத நாயக்கர் ஆட்சிக்காலத்தில் கம்பளத்தார்கள் இனி பலிஜர் குலத்தில் பெண் எடுக்காமல் கம்பளதிலேயே திருமணம் செய்வதை கட்டாயப்படுத்தினார் . இருந்தாலும் மதுரையின் கடைசி அரசி மீனாட்சி வரை பலிஜா பெண்ணாகவே இருந்தனர் . 


கிருஷ்ணதேவராயரின் தாத்தாவின் பெயர் சாளுவ குண்டப்பா நாயக்கர் , சந்திரகிரியின் சேனாதிபதியாக நியமிக்கப்பட்ட காலம் அது , முதுகல் கோட்டை துலுக்கர்களிடம் பறிபோனதால் தொட்டியம் வீரபத்திர நாயக்கர் வேகிளியார் சில்லவார் கூட்டத்தோடு சந்திரகிரிக்கு வந்தார் . முதுகலில் இருந்து வந்த இந்த கூட்டதோர் தங்களை அனைத்திலும் வேறுபடுத்தி காட்டிக்கொண்டனர் , மற்ற வேகிளியார் கூட்டங்கள் பெனுகொண்டா , விஜயநகருக்கு போய்விட்டன . 

அரச மரபுகள்


குமார கம்பணனின் தம்பி இரண்டாம் ஹரிஹரன் 1377 இல் விஜயநகர அரசனான கொண்டைவீட்டு இளவரசனுக்கு தன் மகளை மணம் முடித்து தந்தார் (  கொண்டிவீடு காப்பு குல ரெட்டி வகுப்பை சேர்ந்தவர்களுடையது ) . ஹரிஹரன் 27 ஆண்டுகால ஆட்சியில் கோவா , விஜயநகர மண்டலம் ஆனது . 






இளவரசன் விருபாட்சன் இலங்கை மீது போர் தொடுத்து வெற்றி கொண்டார் , அவரது பேரன் தேவராயன் இரண்டு  1426 இல் பட்டத்துக்கு வந்தபோது விஜயநகர கொண்டைவீட்டு ரெட்டி ராஜியத்தை வென்று தெற்கு ஆந்திரம் முழுவதையும் விஜயநகரின் இணைத்தார் . கொல்லத்தை அடக்கி மலையாள நாட்டை தனது வசம் கொண்டு வந்தார் . 


தேவராயன் காலத்தில் மதுரை ஆளுநராக இருந்த லக்கன்னா ஒரு சேனாதிபதி , மதுரையில் தாங்கள் தான் பாண்டிய வாரிசுகள் என்று பலர் கூறி சண்டையிட்டு கொண்டு இருந்தனர் , மலையாள நாட்டிலும் , காளையார் கோவில் நாட்டிலும் , வேறு மனைவிகளுக்குப் பிறந்தவர்கள் என்று கயத்தாறு , தென்காசி பாண்டியர்கள் வாரிசு போட்டி வந்துவிட்டது . வடுக நாட்டில் இருந்து வந்ததால் சேனாதிபதிகளுக்கு யார் வாரிசு என்பதில் குழப்பமாக இருந்தன . 


லக்கண்ணன் , காளையார் கோவிலில் இருந்த வானாதிராயரை அழைத்து மதுரை அரசனாக ஆக்கினார் . மதுரையில் இருந்து கப்பம் சரியாக வாங்கி தருவதால் " தட்சனா சமுத்திர ஈஸ்வரன் " என்ற பட்டதை லக்கன்னாவுக்கு ராயர் வழங்கினார் . மேலும் கப்பம் பாக்கி தராததால் கண்டிக்கு பெரும்படையுடன் லக்கண்ணன் சென்று வென்று வந்தார் . இம்முறை வழக்கம் போல படைகள் விஜயநகருக்கு திரும்பவில்லை , விரும்பியவர்கள் இங்கயே தங்கலாம் என்று லக்கண்ணன் சொல்லிவிட்டார் . 


திண்டுக்கல் , தாராபுரம் , பழனி தலைவர்கள் விரும்பிய இடங்களில் நிலை கொண்டு விட்டனர் , பாதி அணிகளே விஜயநகருக்கு திரும்பின . கொல்லவார்களின் மாட்டு மந்தைகள் நாய்கள் சூழ பெருவாரியாக உடன் வந்தன .  இரண்டே மந்தைகள் தான் வைகையை கடந்து சென்றன . 


சந்திரகிரியில் இருந்து வந்த சில்லவார் குல குமாரமுத்து எட்டப்ப நாயக்கரின் மந்தைகள் மதுரைக்கு மேற்கே கருக்கொட்டாம்பட்டியில் 1300 வீரர்களுடன் கல்கொட்டை அமைத்து தங்கினர் . மற்றுமொரு சில்லவாறு தளபதியான சக்க நாயக்கரின் அணி கூத்தி( கூட்டி ) கோட்டையில் இருந்து தங்கள் உறவினர்களுடன் சின்னமனூருக்கு கிழக்கே கோட்டை அமைத்து காடுகளை வெட்டி ஊர் செய்து தங்கினர் . 


பிறகு ஆண்ட விஜயநகரின் இரண்டு ராயர்களும் மிகவும் பலவீனமானவர்களாக இருந்தனர் , கலிங்கம் தென் ஆந்திராவை ஆக்கிரமித்து இருந்தது , சந்திரகிரியின் ஆளுநராக இருந்த சாளுவ நரசிம்மன் வலிமையான தளபதி கலிங்கர்களை விரட்டி அடித்தார் . 


1486 இல் சாளுவ வம்சத்தின் முதல் அரசனாக நரசிம்மன் விஜயநகர அரியணை ஏறினார் , கோவா வரை விஜயநகரம் இழந்த பகுதிகளை மீட்டார் . நரச நாயக்கர் என்ற பெயரில் அழைக்கபட்டார் . 


நரச நாயக்கர் தனது தளபதி கொட்டியம் நாகம நாயக்கருடன் சென்று கர்நாடகம் வரை இழந்த பகுதிகளை மீது விஜயநகரில் சேர்த்தார் . நரச நாயக்கர் மதுரையில் இருந்த பொம்மை அரசனை நீக்கிவிட்டு அரண்மனையில் திம்மப்பா நாயக்கரை நியமித்தார் . அனைத்து ஆளுநர்களும் காப்புக்களாக இருந்ததால் சாளுவ அரசரை ஏற்றுக்கொண்டனர் . 


ராமேஸ்வரம் சென்று வழிபட்டுவிட்டு விஜயநகரம் திரும்பினார் நரச நாயக்கர் . ஐந்து ஆண்டுகளில் இரு தனது ஆண் வாரிசினை விஜயநகர் பொறுப்பில் நிறுத்திவிட்டு காலமானார் , 1503 இல் நரச நாயக்கர் இறந்ததும் அவரது மூத்த மகன் வீர நரசிம்மன் முந்தய இளவரசனை பெனுகொண்டா வில் வெற்றி கொண்டு தானே முடிசூடி கொண்டார் ,


துளுவ வம்சம் தோன்றியது 6 ஆண்டுகளில் மைசூர் துளுவ நாயக்கர்களை ஆட்சியில்  ஏற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைசூரில் கிளர்ச்சி எரிய தனது தம்பி கிருஷ்ண தேவரயாரிடம் தலைநகரை ஒப்படைத்துவிட்டு நோய் வாய்ப்பட்டு இறந்தார் . 

மதுரா விஜயம் நூல் - முதல் வடுக படைகள் படையெடுப்பு


குமார கம்பணனின் விஜயநகரப் படை துவாரசமுதிரத்தில் இருந்து 1371 மாசி மாதம் 17 ஆம் நாள் தெற்கு நோக்கி கிளம்பியது . ( இது சிலாவாத்திரா என்ற பெயரில் இம்மரிபினர் இன்றும் கொண்டாடுகின்றனர் - சிவராத்திரி நாள்  ) . செங்கழுநீர் பற்று ( செங்கல்பட்டு ) வட்டார சம்புவராயர்களை எளிதில் அடக்கி காஞ்சியில் நியமித்த ஆளுநருக்கு உட்படுத்திவிட்டு மதுரையை நோக்கி வந்தார் . 


பங்குனி மாதம் மதுரையை சுற்றி படைகள் நிறுத்தப்பட்டன . கம்பிளி நாட்டு வீரர்களுக்கு மதுரையை கண்டதும் வியப்பில் இருந்தன . கம்பிளி நாடு போன்ற வடுக நாடுகளில் இருக்கும் கோட்டைகள் அனைத்தும் கற்களினால் அமைத்து பெரியதாக இருக்கும் , மதுரை கோட்டையோ மண் கோட்டையாக இருந்தன  ,இதை எளிதில் கைப்பற்றிவிடலாம் என்று திட்டம் தீட்டினர் . முகமதியர்களின் வசம் இருக்கும் மதுரையை மீது இந்து ராஜியத்தை நிறுத்துவதே வடுக படைகளுக்கு குறிக்கோள் . 


மேற்கு புறத்தில் செலகொல லட்சுமையாவின் அணி எட்டாயிரம் குதிரைகளுடனும்  , நூறு யானைகள் , பதினைந்தாயிரம் காலாள் வீரர்கள் என நிறுத்தப்பட்டன . தெற்கே நலகாவுல சிவக்கா நாயக்கர் தலைமையில் அணிகள் நிறுத்தப்பட்டன , வடகரைத் தோப்புக்குள் சக்கிலியர்களின் அணிகள் மாதிக விலாளிகள் பெத்த வீருலு வெங்கடாத்திரி தலைமையில் இருந்தன . கிழக்கே தோப்புக்குள் சில்லவார்களின் பெரும்படை காத்திருந்தது , இவர்கள் அசகாய சூரர்கள் என்னும் கரிவருத பெத்தையா நாயக்கர் தலைமையில் பல்லாயிரக்கணக்கில் வீரர்களுடன் காத்திருந்தனர் . 


கொல்லவார்கள் தென்புற முற்றுகையில் நின்றனர் , இவர்களுக்கு தலைமையில் தரிகொடி பசவய்யா நாயக்கர் என்பவர் தலமைஏற்றார். அனைவரையும் வழிநடத்துவது தளபதி பொய்யாவுல மங்கன் என்பவராக இருந்தார் இவர் கொல்லவார் மரபினர் , இவருக்கு இணையான பொறுப்பு அதிகராம் சில்லவார்களின் சங்கு கோபண்ணா நாயக்கருக்கு இருந்ததது . கிணறு தொண்டுவதையும் கல் உடைப்பதையும் பாரம்பரியமாக செய்து வரும் உப்பலவாரு ( உப்பிலிய நாயக்கர் ) குலத்தினர் முதலில் வைகை கோட்டையை வேவு பார்த்து இறங்கினர் . மதுரை கோட்டைக்குள் சென்ற முதல் வடுக குலத்தவர் என்ற பெருமை உப்பலவார் குலத்துக்கே உண்டு . 


குமார கம்பணனின் மனைவி கங்கா தேவி கம்பள பெண்களுக்கே உரிய வீரத்துடன் காட்சி அளித்தாள். அமனமலையில் இருக்கும் சுப்ரமணிய சாமி கோவிலை வணங்கிவிட்டு போரை தொடுக்கலாம் என்று ஆசைபட்டாள் . அதன்படி அவளும் சில தளபதிகளும் மலைமேல் ஏறினர் . மலைமேல் ஏறியதும் கங்காதேவிக்கு மகிழ்ச்சி அந்நிலையில் உற்சாகமாக துள்ளிக்கொண்டு அங்கு வந்த ஸ்ரீ ஜானகி என்ற இளம் கண்ணிகை வந்தாள். இவள் அனைகுந்தியின் பாலமுவாரு தளபதிகள் வழி வந்தவள் . கங்காதேவியின் தூரத்து உறவுக்காரி . அனைகுந்தி கங்கையம்மன் தான் இவளுக்கு குல தெய்வம் , பருவமடைந்து ஒரு வருடமே ஆகி உள்ள நிலையில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்துக்கொண்டு வருகின்றன . ஆணைகுந்தி பாலமுவாரு குலத்தவர்களின் வழிவந்த கனக ஜானகியை கங்காதேவிக்கு மிகவும் பிடிக்கும் . இருவரும் வடுகில் பேசிக்கொண்டு இருந்தனர் . 


கங்காவின் குதிரையான ருத்ருவின் மேல் ஏறி காத்திருக்க கம்பணன் வந்தார் . கம்பள பெண்படை பிரிவின் தலைவியாக சிந்தல ஜக்கம்மா திகழ்ந்தாள் . மதுரையில் அழகை குன்றின் மேல் ஏறி ரசித்துக்கொண்டிருந்த கங்காதேவியின் அருகில் ஒரு கிழவி வந்தாள் . கங்காவுக்கு தமிழ் தெரியாது . அக்கிழவி மதுரை கள்ளர் இன பெண் . அப்பெண்ணை பார்த்து " மீ பேரு ?" என்றாள், கிழவிக்கு எதுவும் புரியவில்லை இருந்தாலும் பேரு என்பதில் இருந்து சடச்சி என்ற தன்னுடைய பெயரை கூறினாள். மேலே எப்படி தமிழ் பேசுவது என்று கங்காதேவிக்கு தெரியவில்லை . 


அமனமலைக்கு அருகில் தொட்ட நாயக்கரின் மனைவி பூமாடி மாரம்மா இரண்டு மாதங்களில் கள்ளர் இனத்தவருடன் பழகி சில தமிழ் சொற்களை தெரிந்து வைத்திருந்தாள். அவள் கங்கா மற்றும் சடச்சி பேசுவதற்கு உதவினாள்.  சடச்சியை கண்டதும் கங்காதேவிக்கு பிடித்துவிட்டது தனது வளையல்களை கழட்டி பரிசாக கொடுத்தாள். 


துங்கபத்திரா நதிக்கரையில் இருந்த கம்பள வடுக படைகள் வைகையை துங்கபத்திரா என்றே பாவித்து குளித்து மகிழ்ந்தனர் . இந்த நேரத்தில் துலுக்க படைகள் வடுக படைகளை தாக்க ஆரம்பித்தன . கம்பள பெண் தளபதியான ஜோக்கம்மாவை போரை தொடுக்க வேண்டும் , ராஜாவிடம் சொல்லிவிட்டுவரும்படி கங்கா கூறினாள் . கம்பணன் கோபத்தோடு கங்காவை நோக்கி , " இது விளையாட்டு இல்லை , போர் . சித்திரை முழு அமாவாசை இந்த இருட்டில் போர் தேவையா ? " என்றார் . 


கங்கா கம்பள பெண்ணின் வீரத்தோடு ," கம்பணா விலகி நில் ! இது என் யுத்தம் , கம்பிளியின் யுத்தம் , இதற்காக தான் காத்திருந்தேன் , ஆயிரம் ஆயிரம் கம்பளதார்களை இழந்தாலும் அந்த ரத்தத்தில் நடந்து சென்று இன்று இரவே பலி எடுப்பேன் , அனைகுந்தியின் பகை முடிப்பேன் , மதுரையை மீட்ப்பேன் இது ரேணுகா தேவி மீது ஆணை என்று கோபத்தோடு கூறினாள் .     குமார கம்பணன் கங்காவின் சீற்றத்தை கண்டு வியந்தார் . 


கம்பளதார்களுக்கு கங்கை அம்மனும் , எல்லம்மா , ரேணுகாதேவி தான் குல தெய்வம் ஆனால் காவிரி ஆற்றை கடக்க உதவி கம்பள மக்களை காட்டு வெள்ளத்தில் இருந்து காத்ததால் ஜக்கம்மா , பொம்மம்மா போன்ற தெய்வங்களையே தற்போது குல தெய்வமாக கொண்டுள்ளனர் . 


கங்கயம்மனின் பூஜை நடைபெற்றது , குலபெரியவர்கள் , தளபதிகள் , தலைவர்கள் அனைவரும் வரிசைப்படி நின்றனர் . கங்கா , கம்பணன் பூஜைக்கு வந்தனர் . பூஜை ஆரம்பம் ஆனது , தேவதுதும்பிகள் வரிசையாக வந்தன , அந்த உருமிகள் இடியை போல உருமின . மண்ணில் விரிக்கப்பட்ட கம்பளத்தில் அனைத்து கம்பளத்து பெரியவர்களும் அமர்ந்து இருந்தனர் . 






முதலில் கொல்லவார்களின் காமதேனு பொலிஆவு முதலில் வந்தது . குல ஜென்டலவாறு கொல்லவார்களின் பெருமையை பாடல்களாக பாடினார் . அடுத்து குல வழக்கப்படி சக்கிலியர்களின் ஆவு தான் வரவேண்டும் ஆனால் வரும் வழியில் கடவுளான ஆவினையே பசியில் கொன்று தின்றுவிட்டதால் அவர்கள் சடங்குகளை பார்க்க முடியுமே தவிர பங்குகொள்ள அனுமதி இல்லை . சக்கிலியர்களின் பெருமைகளை பாடல்களாக உரிமிக்காரன் பாடினார் . அவர்களுக்கான பசுவன்னா ஆவு வந்தது . 


பிறகு சில்லவார்களின் புல்லைஆவு வந்து நின்றது . பிறகு குஜ்ஜ பொம்மு , பாலமன்னா , காவன்னகாரு, இர்ரிகாரு , கம்பராஜு போன்ற வேகிளியார் குல ஆவுகள் வந்து கம்பளத்தில் நின்றன . வேகிளியார்களின் பெருமைகளை பாடல்களாக பெரியவர்கள் பாடினர் . 


கங்கை அம்மன் வழிபாடு முடிந்தது , அடுத்து எல்லம்மா பூஜை . எல்லம்மா தான் கம்பளத்து வகையராவுக்கு குல தெய்வம் மற்றும் ஆதி தெய்வம் . எல்லம்மாவின் உருவத்தை இரண்டு யானை உயரத்தில் மண்ணால் அமைத்து வைப்பது வழக்கம் . போர் தொடங்கும்முன் இந்த சடங்குகளை செய்வது கம்பள காப்புக்களுக்கு வழக்கம் . 


போர் தொடங்கிவிட்டது . எல்லம்மாவின் மாலையை எடுபவர்களே போரில் தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்பவர்கள் . எல்லம்மாவை நோக்கி கம்பள குலத்தவர்களின் கன்னி கழியாத ஆண்கள் ஓடுவர் . போட்டி வல்லக்கவாருக்கும் , வேகியார் குலங்களுக்கும் தான் இருக்கும் . இது இவர்களுக்கு கவுருவ பிரச்சனை , யார் முந்துவது என்பது தான் இவர்களுக்குள் போட்டி . 


ஜனகவாரு பலிஜா குலம் குலவையிட எல்லாமாவை வணங்கிவிட்டு ஓடத்தொடங்கினர் . கனகனுகா என்ற பாலமுகாரு பெண்ணே மாலையை கைப்பற்றினார் . " பாலமன்னா பிட்டலன்னா பாரி போய் எத்திரி அண்ணா " என்ற கம்பள பாடல்கள் இன்றும் பாடுவதை அறியலாம் . 


மதில் ஏறுவதில் வல்லவர்களான ஏறகொல்லவாருகள் கிழக்கில் கோட்டை மீது ஏறி அகழியில் பாய்ந்தனர் , பல்லாயிரக்கணக்கில் உயிர்சேதம் ஏற்பட்டது இருந்தாலும் ஏறகொல்லா தலைவன் ஏறியவாறு இருந்தார் . 


முழுவேகத்தில் சில்லவார்கள் மதில் முனைகளில் சண்டை போட்டுக்கொண்டு இருந்தனர்  . நெருப்பை ஆயுதமாக கொண்டு துலுக்க படைகளின் மீது பாய்ச்சி அடித்தனர் , சில்லவார்களின் தாக்குதலை தாங்காமால் துலுக்கர்கள் பலர் இறந்தனர் . 


சக்கிலியர்கள் முகமதியர்களை அம்புகளால் அறைந்து குருவிகளை போல அடித்து நொறுக்கினர் . கொல்லவார்கள் கண்ணில் கண்ட துலுக்கர்களை எல்லாம் கொன்று குவித்தனர் . கங்காதேவியின் கம்பள பெண்களின் அணி வராக கொடியுடன் ஜக்கம்மாவின் குதிரை பாய்ந்தது , தெலுங்கு குரல் வெறியுடன் காணப்பட்டன , முகமதியர்கள் தப்பி ஓடாத அளவில் கம்பள பெண்கள் அணியினர் தாக்கினர் . கம்பள தலைவன் மங்கன் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார் . 


உள்ளே இருந்த துலுக்க பெண்கள் கூக்குரல் இட்டு கூப்பிய கையோடு தரையில் விழுந்தனர் . எங்கே சுல்தான் என்று கேட்டான் தளபதி , தெரியாது என்றான் அங்குள்ள துலுக்க பிரதிநிதி ஒருவன்  ,அவன் தலையை வெட்டினார் , சரணம் அடைந்த பெண்களை விடுதலை செய்தார் . சுல்தான் தப்பி ஓடினான் . 


கங்காவின் அணி கோட்டையை விட்டு வெளியேறியபோது காவாவுல காமாட்சி , கோவுதாணு கிருஷ்ணம்மா , காலமு ரேணுகா , ஆரம்மா , காடம்மா , போடாவுலம்மா போன்ற பெண் தளபதிகள் போரில் இறந்தனர் . 


இரண்டு நாள் கழித்து போர் வெற்றியை கொண்டாடினர் . வைகை ஆற்றில் கம்பள பெண்கள் குளித்து மஞ்சள் பூசி கொச்சை பேச்சுகளுடன் சந்தோசமாக குளித்துக்கொண்டு இருந்தனர் , அப்போது தூரத்தில் 50 குடும்பங்கள் மேற்கு நாடு நோக்கி சென்று கொண்டு இருந்தனர் , அவற்றை கண்ட கங்கா அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று கேட்டாள். 


சற்று தமிழ் தெரிந்த மாரம்மா விசாரித்து அவர்கள் துலுக்க சுல்தான்களின் பிடியில் பாலியல் கொடுமைகளுக்கு இத்துணை காலம் ஆளாகினர் தற்போது துலுக்கர்களின் ஆட்சி இல்லாமல் போய்விட்டதால் தங்கள் ஊர்களுக்கு செல்கின்றனர் என்றாள் . அதில் ஒரு சிறுமியை அனைத்து கங்காதேவி அவளின் பெயரை கேட்டாள் , வீரலட்சுமி என்று சொன்னதும் அவளுக்கு உதித்தது " மதுரா விஜயம் " . 




மதுரா விஜயம் என்ற நூலில் குமார கம்பணனின் போர் வெற்றிகளை சமஸ்கிரத மொழியில் எழுத தொடங்கினாள் கங்கா தேவி . கம்பணன் என்ன செய்கிறாய் என்று கேட்க ? மதுரா விஜயம் எழுதுகிறேன் என்றாள் . 


சிரித்துக்கொண்டே கம்பணன் , மதுரைக்கு அரசியாக நினைகின்றாயா என்று கேட்டார் , ஏன் கூடாது ? காகதிய பேரரசில் முழு அதிகாரத்தை நமது காப்பு பெண்ணான ருத்ரம்மா ஆட்சி செய்தபோது , நான் ஆட்சி செய்யக்கூடாதா ? என்று பதில் கேட்டாள் . 


பெயரளவில் பாண்டிய மன்னன் ஒருவரை நிறுத்தி மதுரையை ஆட்சி செய்யசொன்னார் கம்பண்ணன் .